லியோ க்ளைமாக்ஸில் பெரிய சம்பவம் இருக்கு.. எதிர்பார்ப்பை எகிற வைத்த லோகேஷ் கனகராஜ்!
சென்னை: லியோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் செம சம்பவம் இருக்கிறது என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இப்படம் வருகிற அக்டோபர் 19ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 5 நாட்களே எஞ்சி உள்ளதால், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

லியோ திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக பிரம்மாண்டமக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
லியோ விறுவிறுப்பான வேலை: லியோ படத்தின் இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. அக்டோபர் 16ந் தேதிக்குள் அனைத்து வேலைகளும் முடிந்துவிடும். ஆனால், படம் வெளியாகி ஒருவாரம் கழித்து படத்திற்கு எந்த மாதிரியான ரேட்டிங், விமர்சனம் வருகிறது என்பதை பார்த்த பிறகு தான் மனசு நிம்மதி அடையும்.
ரொம்ப நல்ல இருக்கும்: மற்ற திரைப்படத்தைப் போல இந்த திரைப்படத்திலும் அதே ஆக்ஷன் தான் இருக்கிறது. இருந்தாலும் வசனம், காட்சி அமைப்பில் இருக்கும் மாற்றத்தை பார்க்கும் போது அது ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும். மேலும், இந்த படத்தை தியேட்டரில் பார்க்கும் போது ரொம்ப நல்லா இருக்கும். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை படத்தின் மொத்த கதையும் விஜய்யின் தோளில்தான் இருக்கும்.

செம சர்ப்ரைஸ்: மேலும், படத்தில் விஜய் ரசிகர்களுக்காக செம சர்ப்ரைஸ் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கடைசி 40 நிமிடத்தில் இருக்கிறது. அது விஜய் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும், டிரைலரில் கெட்டவார்த்தை வந்தால், அது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானதால், தற்போது அது மியூட் செய்யப்பட்டுள்ளது என்று லோகேஷ் கனகராஜ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சைக்கோ வில்லன்: இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி, மிஸ்கின் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இதுவரை டான்ஸ் மாஸ்டராக இருந்த சாண்டி, இந்த படத்தில் மிரட்டலான சைக்கோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவரின் நடிப்பு நிச்சயம் பேசப்படும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











