Don't Miss!
- News
லட்டு எல்லாம் பழசு.. பிரசாதமாக "பர்கர், சாண்ட்விச்" தரும் சென்னை கோயில் -இன்னும் பல விசயம் இருக்கு
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
“தளபதி 67“ படத்தில் இணைந்த பிரபலங்கள்...லோகேஷ் கனகராஜ் வைத்த புது ட்விஸ்ட்!
சென்னை : தளபதி 67 திரைப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புது ட்விஸ்டை வைத்துள்ளார்.
கைதி, மாஸ்டர், விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்தைப் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், படம் பற்றிய சூப்பரான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக 20 நாட்களை கடந்த விக்ரம்.. 20 நாட்களில் எவ்ளோ கலெக்ஷன் தெரியுமா?

விஜய்யின் பிறந்த நாள்
நடிகர் விஜய்யின் 48வது பிறந்த நாள் நேற்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விஜய்க்கு ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்து இணையத்தையே திக்குமுக்காடவைத்து விட்டது. தளபதியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினமே விஜய் நடிக்கும் 66 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியானது.

வாரிசு
தமிழ், தெலுங்கு என இருமொழியில் வெளியாக உள்ள இப்படத்திற்கு தமிழில் வாரிசு என்றும் தெலுங்கில் வாரிடு என்றும் பெயர்வைக்கப்பட்டுள்ளது. குடும்ப கதை என்பதால், வாரிசு என்ற டைட்டில் பொருத்தமாக உள்ளதென்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். விஜய்யின் பிறந்தநாளான நேற்று காலை 11 மணிக்கு வாரிசு திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும், மாலையில் மூன்றாவது போஸ்டரும் வெளியானது. ஒவ்வொரு போஸ்டரிலும் ஒவ்வொரு விதமாக மிரட்டி இருந்தார் விஜய். இந்த போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

ஏராளமான நடிகர்கள்
தெலுங்கு சினிமாவில் மோஸ்ட் வான்ட்டடாக இருக்கும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு, ஜெயசுதா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

கனவு படம்
விஜய்யின் பிறந்தநாளன்று லோகேஷ் இயக்கும் தளபதி 67 திரைப்படம் குறித்து அப்டேட் வரும் என்று எதிர்பார்த்த நிலையில், அப்படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆனால், தற்போது, இப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் பல வருடங்களுக்கு முன்பே எழுதியதாகவும், இது அவரின் கனவு படம் என்றும், ஆனால், தற்போது கதையை மாற்றி எழுதிவருவதாகவும் கூறப்படுகிறது.

அக்டோபரில் படப்பிடிப்பு
இப்படம் லோகேஷ் கனகராஜின் யுனிவர்ஸ் படமாகவும் இல்லாமல் தனித்துவமான படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அக்டோபர் மாதம் 2 ம் தேதி படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. தளபதி 67 படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் இணைந்திருப்பதாக கூறப்படுவதால், விக்ரம் படத்தில் பயன்படுத்திய LCU டெக்னிக்கை இப்படத்திலும் பயன்படுத்துவாரா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.