எல்லாத்துக்கும் நன்றி விஜய் அண்ணா.. லோகேஷ் ஹேப்பி ட்வீட்.. தளபதி எப்படி இருக்காரு பாருங்க!
சென்னை: 37வது பிறந்தநாளை காஷ்மீரில் லியோ படக்குழுவுடன் நேற்று இரவே பார்ட்டி வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொண்டாடியுள்ள நிலையில், அதன் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
மேலும், தளபதி விஜய் உடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அடுத்தடுத்து போட்டோக்கள் வெளியான நிலையில், விஜய் ரசிகர்கள் #LeoFilm ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மீண்டும் விஜய்யுடன் இணைந்து
மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் இரண்டாம் பகுதி விமர்சிக்கப்பட்ட நிலையில், விக்ரம் படத்தை போலவே விஜய்க்கும் சாலிடாக ஒரு படமாக லியோ இருக்கும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

பர்த்டே பார்ட்டி
37வது பிறந்தநாளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காஷ்மீரில் லியோ படக்குழுவுடன் கொண்டாடி வருகிறார். தயாரிப்பாளர் லலித் ஸ்பெஷலாக ஒரு பர்த்டே பார்ட்டியே நேற்று இரவே ஏற்பாடு செய்து படக்குழுவுடன் கொண்டாடி உள்ளனர். பர்த்டே பார்ட்டியில் சஞ்சய் தத், த்ரிஷா எடுத்த புகைப்படங்கள் வெளியான நிலையில், விஜய்யுடன் தனியாக காலையில் காஷ்மீர் பனி பேக்ரவுண்டில் எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

கட்டிப்பிடி வாத்தியார்
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் சஞ்சய் தத் முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தில் நடித்திருந்தார். தமிழில் அந்த படத்தை தான் கமல்ஹாசன் வசூல் ராஜா எம்பிபிஎஸ் என ரீமேக் செய்து நடித்திருந்தார். இந்நிலையில், கட்டிப்பிடி வைத்தியத்தை அறிமுகப்படுத்திய கட்டிப்பிடி வாத்தியார் சஞ்சய் தத் லோகேஷை கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

த்ரிஷா வாழ்த்து
சஞ்சய் தத்தை தொடர்ந்து நடிகை த்ரிஷா இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் செம க்ளோஸாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அந்த புகைப்படமும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. சமீபத்தில் தனது ரூமிற்கு விருந்தினர்களாக வந்த குரங்களுக்கே பழங்களை வழங்கி இருந்தார் த்ரிஷா.

எல்லாத்துக்கும் நன்றி அண்ணா
கார்த்தியின் கைதி திரைப்படம் வெளியாகும் முன்பே அந்த படத்தின் தாக்கத்தை புரிந்து கொண்டு மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார் தளபதி விஜய். அந்த படம் கொரோனா காலத்தில் தியேட்டரில் பெரிய படங்கள் வரவே பயப்பட்டு வந்த நிலையில், ரசிகர்களை தியேட்டரை நோக்கி வரவழைக்க தைரியமாக வெளியாகி மாஸ் காட்டியது. அடுத்ததாக தற்போது லியோ படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் நிலையில் எல்லாத்துக்கும் நன்றி விஜய் அண்ணா என லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தளபதிக்கு நன்றி கூறியுள்ளார்.

விஜய் லுக் தெறிக்குது
கருப்பு நிற ஜெர்க்கின் உடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருக்க அவரது தோளில் கை போட்டு தளபதி விஜய் வெள்ளை நிற உடையில் பனி பேக்ரவுண்டில் பக்கா மாஸாக இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து தளபதி விஜய்யின் அழகை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











