லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை எழுதும் ரகசியம் இதுதான்.. அவரே பகிர்ந்த சுவாரஸ்யம்
சென்னை: லோகேஷ் கனகராஜ் கதையும், திரைக்கதையும் எழுதும் ரகசியம் குறித்து அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் கவனம் ஈர்த்துள்ளது.
மாநகரம் படம் மூலம் அறிமுகமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்தார். அதனையடுத்து அவர் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் மெகா ஹிட்டாகின. இதனால் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் லோகேஷ். விஜய்யை வைத்து இப்போது லியோ படத்தை இயக்கிவருகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. படமானது அக்டோபர் மாதம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் செய்த புதுமை
யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் இருந்தாலும் அவரது திரைக்கதையில் பல புதுமைகளை புகுத்துபவர் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக விக்ரம் படத்தில் அவர் திரைக்கதையில் செய்த புதுமை பலரையும் வாய் பிளக்க வைத்தது. ஹாலிவுட் சினிமாக்களில் எப்படி யுனிவெர்ஸை உருவாக்குவார்களோ அதேபோல் கோலிவுட்டிலும் சினிமாட்டிக் யுனிவெர்ஸை உருவாக்கியிருக்கிறார் லோகேஷ். இதனால் எல்சியூ இப்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் ரகசியம்
ஒவ்வொரு படத்துக்கும் லோகேஷ் கனகராஜால் திரைக்கதையில் எப்படி புதுமையை புகுத்த முடிகிறது என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. இப்போது அவர் எடுத்துக்கொண்டிருக்கும் லியோ படத்தின் திரைக்கதையிலும் என்னென்ன சர்ப்ரைஸ்களை ரசிகர்களுக்கு கொடுக்கப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. குறிப்பாக லியோ படமும் எல்சியூவில் வருமா எனவும் கேள்வி எழுந்திருக்கிறது.

லோகேஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் எப்படி எழுதுவார் என்பது குறித்து அவரே விளக்கமளித்திருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், பாடல்கள் என்றாலே தப்பித்து ஓடிவிடுவேன். ஒவ்வொரு இயக்குநரும் எவ்வாறு பாடல்களை அணுகுகிறார்கள் என்பதை கூர்ந்து கவனிப்பேன். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா படத்தை மியூசிக்கல் கேங்ஸ்டர் ஸ்டோரி என்று ஆரம்பித்திருப்பார். அப்படினா என்னது என பார்க்கப்போனபோது மொத்தம் 12 பாடல்கள் இருந்தன. அதுதான் கைதி படத்தில் நான் இசையை அணுகுவதற்கு காரணம்.

இசை இல்லாமல் நான் எழுதுவதே இல்லை
பின்னணி இசை இல்லாமல் நான் இதுவரை எதையும் எழுதியதே இல்லை. தி டார்க் நைட் அல்லது சிம்மரின் பின்னணி இசை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். அப்போதுதான் ஏதோ ஒரு ஐடியாவைப் பிடித்து நான் எழுத ஆரம்பிப்பேன். ஷூட்டிங் முடிந்த பிறகு நான் கேட்ட பின்னணி இசையுடன் கனெக்ட் ஆகிறதா என்பதை பார்ப்பேன். அப்படி கனெக்ட் ஆகிவிட்டதாக எனக்கு தோன்றினால் சரியாக சென்றுகொண்டிருக்கிறோம் என தோன்றும். அதற்கான இசையை பிறகு இசையமைப்பாளரிடமிருந்து வாங்குவேன்" என கூறினார்.


Click it and Unblock the Notifications











