Leo - எனக்கு அது மட்டும் உருப்படியா வராது.. ஆனால் லியோவில் வந்திருக்கிறது.. சீக்ரெட் சொன்ன லோகேஷ் கனகராஜ்

சென்னை: Leo (லியோ) லியோ படத்தில் தான் ஒரு விஷயத்தை உருப்படியாக செய்திருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர். பெரும் நட்சத்திர பட்டாளமே இதில் களமிறங்கியிருப்பதால் லோகேஷ் கனகராஜின் திரைக்கதை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

Lokesh Kanagaraj Shares about Leo Movies Romance Scenes

எல்சியூவில் வருமா: லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒருசேர பெற்றிருக்கிறது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக படத்தில் பெரிய ட்விஸ்ட் இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர். அதேசமயம் இந்தப் படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வருமா என்ற கேள்விக்கு ட்ரெய்லரில் ஹிண்ட் இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எந்த ஒரு ஹிண்ட்டையும் ட்ரெய்லரில் வைக்கவில்லை. இதனால் கொஞ்சம் ஏமாற்றமடைந்திருக்கின்றனர் ரசிகர்கள்.

மெகா ஹிட்தான்: ஆனால் ட்ரெய்லரை பார்க்கும்போது கண்டிப்பாக படம் மெகா ஹிட்டாகிவிடும் என உறுதிபட கூறுகிறார்கள் ரசிகர்கள். அதேபோல் படத்தின் ரிலீஸுக்கு இன்னும் பத்து நாட்களே இருப்பதால் அதற்கான ப்ரோமோஷன் பணியும் சூடுபிடித்திருக்கிறது. அதனையொட்டி லோகேஷ் கனகராஜ் பல பேட்டிகளை தொடர்ந்து கொடுத்துவருகிறார்.

ஏன் சின்மயி: இந்த சூழலில் லியோ படத்தில் த்ரிஷாவுக்கு சின்மயி டப்பிங் கொடுத்திருக்கிறார். அவர் டப்பிங் கொடுக்கக்கூடாது என சில காலத்துக்கு முன்னர் டப்பிங் யூனியன் தடை விதித்திருந்தது. ஆனால் அதையும் மீறி லோகேஷ் இந்தப் படத்தில் சின்மயியின் குரலை பயன்படுத்தியிருக்கிறார். தடையை மீறியும் லோகேஷ் ஏன் சின்மயியை பயன்படுத்தினார் என்ற கேள்வியும் எழுந்தது.

தற்போது அதற்கு அவர் விளக்கமளித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "எனக்கு எப்போதுமே ரொமான்ஸ் காட்சிகளை உருப்படியாக எழுத வராது லியோ படத்தில் அது கொஞ்சம் உருப்படியாக வந்திருப்பதாக எனக்கே தோன்றியது. விஜய்யும், த்ரிஷாவும் அந்த காட்சியில் மிக அருமையாக நடித்திருக்கின்றனர். அதற்கு நியாயம் சேர்க்க வேண்டும் என்பதற்காக சின்மயியை டப்பிங் பேச வைக்கலாம் என முடிவு செய்தேன்.

அவருக்கு தடை விதித்ததெல்லாம் எனக்கு தெரியவில்லை. எனக்கு என் வேலை சிறப்பாக முடிய வேண்டும். அதனால் அவரை அழைத்து பேச சொன்னேன். த்ரிஷாவின் கேரக்டருக்கு சின்மயி தனது குரலால் உயிர் கொடுத்திருக்கிறார். அனைத்து மொழிகளிலும் த்ரிஷாவுக்கு அவர்தான் டப்பிங் பேசியிருக்கிறார்" என்றார். இதற்கிடையே லியோ படத்துக்கு அதிகாலை காட்சி அனுமதி கிடைக்காததால் அக்டோபர் 18ஆம் தேதி பெய்டு ப்ரீமியர் ஷோவுக்கு தயாரிப்பாளர் லலித் ஏற்பாடு செய்திருப்பதாக ஒரு தகவல் உலாவிக்கொண்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X