Lokesh Kanagaraj - அதுக்கு காரணம் WWEதான்.. வெளியான லியோ சீக்ரெட்.. லோகேஷ் கனகராஜ் முரட்டு 90ஸ் கிட் போல
சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்து கொடுத்த ஒரு பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் அந்தப் படம் கண்டிப்பாக மெகா ஹிட்டாகும் என்று விஜய்யின் ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கின்றனர். ஏனெனில் இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரெய்லர்: சூழல் இப்படி இருக்க படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5ஆம் தேதி ரிலீஸானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிடவும் படம் ஸ்டைலிஷாகவும், ஆக்ஷனாகவும் வந்திருப்பது உறுதியாகியிருப்பதாக கொண்டாடுகின்றனர். அதேசமயம் ட்ரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் அளவுக்கதிகமான வன்முறை காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக ஒரு கருத்து எழுந்திருக்கிறது.
சிறப்பு காட்சி: உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக இருந்தது என்னவென்றால் இந்தப் படத்துக்கு சிறப்பு காட்சிக்கான அனுமதி கிடைக்குமா என்பதுதான். ஜெயிலருக்கு கிடைக்காத சிறப்பு காட்சி அனுமதி லியோவுக்கு கிடைத்துவிட்டது. ஆனால் சிறப்பு காட்சியை 9 மணிக்குத்தான் திரையிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிறப்பு காட்சியை 7 மணிக்காவது திரையிட அனுமதிக்க வேண்டும் என பட தயாரிப்பு நிறுவனம் இன்று நீதிமன்றம் சென்றிருக்கிறது.
பாடல்கள்: படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் முதலில் வெளியான நா ரெடிதான் பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து Bad Ass என்ற இரண்டாவது சிங்கிள் வெளியானது. இதனையடுத்து லியோவின் மூன்றாவது சிங்கிளான அன்பெனும் பாடல் வெளியானது.
WWEதான் காரணம்: இந்நிலையில் Bad Ass பாடலின் ஆரம்ப இசை WWEயை நியாபகப்படுத்துவதாக ரசிகர்கள் ஒருதரப்பினர் கூறினர். இந்த சூழலில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஆம். பாடலில் அந்த குறிப்பிட்ட இசைக்கு காரணம் WWEதான். ஸ்டோன் கோல்ட், ராக், ட்ரிப்பிள் ஹெச் உள்ளிட்டோருக்கு வரும் இசை போல கலந்துகொடுக்க முடிவு செய்திருந்தோம். அது சிறப்பாகவே வந்திருக்கிறது" என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் யப்பா லோகேஷ் கனகராஜ் முரட்டு 90ஸ் கிட்டா இருக்காரேப்பா என ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











