110 நாட்கள்.. வெறித்தனமாக நடந்த விக்ரம் ஷூட்டிங் ஓவர் ஆகிடுச்சாம்.. லோகேஷ் போட்ட தெறி ட்வீட்!
சென்னை: கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததாக கமல் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் லீக் ஆகின.
Recommended Video
இந்நிலையில், 110 நாட்கள் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
ஆனால், இந்த வீடியோவில், கமல் மற்றும் விஜய்சேதுபதி இல்லாதது ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

விக்ரம் படப்பிடிப்பு நிறைவு
விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் எந்தவொரு படமும் இன்னமும் வெளியாகவில்லையே என பல வருடங்களாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு படையல் விருந்தே போட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காத்திருக்கிறார். வரும் ஏப்ரல் 28ம் தேதி விக்ரம் படம் வெளியாக உள்ள நிலையில், அதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

110 நாட்கள் ஷூட்டிங்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் எல்லாம் செம ஸ்பீடாக படப்பிடிப்பை முடித்து ஃபைனல் அவுட்புட்டை குறைந்த மாதத்திற்குள் கொடுத்து விடுவதாலே அவர்களுக்கு தொடர்ந்து பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படப்பிடிப்பை வெறும் 110 நாட்களில் நடத்தி முடித்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

தோட்டா தெறிக்க
துப்பாக்கியில் இருந்து தோட்டா தெறிக்க தெறிக்க ஒரு படப்பிடிப்பு நிறைவு வீடியோவை ஷேர் செய்து இந்த அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அந்த துப்பாக்கியை வெறித்தனமாக பகத் ஃபாசில் சுடுவது போலவும் அருகே லோகேஷ் கனகராஜ் மற்றும் விக்ரம் படக்குழுவினர் உள்ளனர். நடிகர் நரேனும் உள்ளார்.

கமல், விஜய்சேதுபதி எங்கே
ஆனால், விக்ரம் படத்தின் ஹீரோவான கமல்ஹாசன் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி எங்கே காணோம் என ரசிகர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் மூவரும் இருக்கும் வீடியோவை ஷேர் பண்ணுங்க என்றும் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர்.

செம பிசினஸ்
கைதி, மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க் 112 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், விக்ரம் படத்தின் இந்தி ரீமேக் வெர்ஷனும் 60 கோடிக்கு மேல் வியாபாரம் பேசப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











