Inimel song release: வெளியானது இனிமேல் பாடல்.. உலகநாயகன் கொடுத்த சர்ப்ரைஸ்!

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து வெற்றி படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிவரும் நிலையில் அவர் அவ்வப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் அவர் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் அடுத்ததாக அன்பரிவின் இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து அவர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இனிமேல் என்ற பாடலில் நடித்து முடித்துள்ளார். இந்த பாடல் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வெளியீட்டு விழாவில் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கவுள்ள தலைவர் 171 படத்தின் அப்டேட் மற்றும் கைதி 2 படத்தின் அப்டேட் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளார். இனிமேல் பாடலை நடிகர் கமல்ஹாசன் தயாரித்து பாடல் வரிகளையும் எழுதியுள்ளார். இந்த பாடலை ஸ்ருதிஹாசன் இசையமைத்து இயக்கியுள்ளார். பாடலையும் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக பாடியுள்ளார். முன்னதாக இந்தப் பாடலின் டீசர் வெளியாகி ஏராளமான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Lokesh Kanagaraj amp amp Shruti haasan s Inimel song released

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தில் துவங்கிய தன்னுடைய இயக்குநர் பயணத்தை தொடர்ந்து வெற்றி பயணமாக மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டில் விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வெளியிட்ட லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். இந்தப் படம் ஏப்ரல் மாதத்தல் சூட்டிங் துவங்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஜூன் மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் அப்டேட் தெரிவித்துள்ளார்.

இனிமேல் பாடல் வெளியீடு: இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்து பாடியுள்ள இனிமேல் என்ற பாடலில் அவருடன் இணைந்து நடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த பாடலுக்கான வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ள நிலையில் பாடலை அவரே தயாரித்துள்ளார். முன்னதாக இந்த பாடலின் டீசர் வெளியாகி லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசனின் கெமிஸ்ட்ரி விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த பாடலை ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்த ரிலீசின்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் பங்கேற்றனர்.

தலைவர் 171 பட அப்டேட்: இந்த பிரஸ் மீட்டின்போது பேசிய லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்காக நான்கு முதல் ஐந்து மாதங்களை தாங்கள் எடுத்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஒன்றரை ஆண்டுகள் நடக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தலைவர் 171 படத்தின் சூட்டிங் நிறைவடைந்த ஒரே மாதத்தில் கைதி 2 படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். கார்த்தியின் நடிப்பில் முன்னதாக வெளியான கைதி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் கைதி 2 குறித்து அவர் தற்போது அப்டேட் தெரிவித்துள்ளார்.

கைதி 2 அப்டேட்: அடுத்த ஆண்டில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில் அடுத்த ஆண்டிலேயே படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இனிமேல் பாடல் வெளியாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது. இந்தப் பாடலில் ஸ்ருதிஹாசன் சிறப்பாக பாடியுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலில் லோகேஷ் கனகராஜ் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசனின் இடையில் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. தொடர்ந்து தன்னுடைய படங்களில் கொலை, கொள்ளை, போதை என கதைக்களங்களை உருவாக்கி கொஞ்சமும் கருணை இல்லாமல் நாயகிகளை கொலை செய்து வந்தார் லோகேஷ் கனகராஜ்.

காதல் பாடலில் லோகேஷ் கனகராஜ்: இந்நிலையில் அவரை காதல் பாடலில் நடிக்க வைத்து சாதித்துள்ளார் ஸ்ருதிஹாசன். முன்னதாக அவர் லோகேஷ் கனகராஜ் குறித்த தன்னுடைய ஐடியாவை கமலிடம் பகிர, கமல்ஹாசன் தான் லோகேஷ் கனகராஜை கூப்பிட்டு இதுகுறித்து பேசியுள்ளார். இதை கேட்டதும் அரண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இந்த காதல் பாடலில் நடித்து முடித்துள்ளார். ஆனாலும் இவர் எப்படி காதல் காட்சிகளில் நடிப்பார் என்று கேள்வி எழுப்பிய ரசிகர்களுக்கு பதிலாக இந்த பாடல் தற்போது அமைந்துள்ளது. ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. இந்தப்பாடலின் இறுதியில் கமல்ஹாசனும் சில வரிகளை பாடி ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X