ரஜினி சார் விஷயத்தில் பயமுறுத்தாதீங்க.. மருத்துவமனைக்கு செல்ல இதுதான் காரணம் .. லோகேஷ் கனகராஜ் ஓபன்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வரும் நிலையில், லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டாரை படாதபாடு படுத்தியது தான் அவர் உடல்நலம் பாதிக்க காரணமே என சில யூடியூப் சேனல்களில் பிரபலங்கள் பேசியது அதிர்ச்சியை அளிக்கிறது என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
ரஜினி சார் தான் 40 நாட்களுக்கு முன்பாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டி உள்ளதாக முன்கூட்டியே அறிவித்து விட்டார். அவரது போர்ஷன்கள் விசாகப்பட்டினத்தில் முடிந்த நிலையில் தான் அவர் கிளம்பி மருத்துவமனைக்கு வந்து அட்மிட் ஆனார்.

அதன் பின்னர், நாகார்ஜுனா சார் போர்ஷன்களை தான் எடுத்துக் கொண்டிருந்தோம். வரும் அக்டோபர் 15ம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் பங்கேற்பார். ஆனால், யூடியூபில் ஒன்றுமே தெரியாமல் எந்தவொரு விசாரணையும் செய்யாமல் சிலர் வாய்க்கு வந்தபடி எல்லாம் சொல்வதை கேட்டு எங்களுக்குத்தான் ரொம்பவே பேனிக் ஆனது என லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்துள்ளார்.
பயமுறுத்துறாங்க: சூப்பர் ஸ்டார் திட்டமிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டுக்கு நலமுடன் திரும்பியுள்ளார். ஆனால், சில யூடியூப் சேனல்கள் மற்றும் மீடியாக்கள் சொல்வதை கேட்டால் எனக்கும் என் குழுவுக்கும் தான் ரொமப்வே பேனிக் ஆகிவிட்டது. எங்களை நெருங்க முடியவில்லை என்றாலும் சன் பிக்சர்ஸ் அலுவலகம் சென்னையில் தான் இருக்கிறது. அவர்களை அணுகி கேட்டிருந்தாலே உண்மையை சொல்லியிருப்பார்கள் என்றார்.
நான் காரணமா?: ரஜினிகாந்த் உடல்நலக்குறைவுக்கு கூலி படத்தில் நடந்த விஷயங்கள் தான் காரணம் என்றும் நான் தான் காரணம் என்றும் சிலர் பேசியுள்ளனர். இந்த வயதில் ரசிகர்களுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யும் அந்த மனுஷனை நாங்கள் எல்லாரும் கொண்டாடுகிறோம். அப்படி ஏதாவது எங்கள் மீது குற்றமிருந்தால் இன்று காலை வரை படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருப்போமா? நாங்கள் எல்லாம் மருத்துவமனையில் தானே இருந்திருப்போம். சன் பிக்சர்ஸ் எங்களை சும்மா விட்டுருப்பாங்களா என மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விளக்கம் அளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
ரஜினி சாருக்கு ஒன்றுமே ஆகாது: அவர் எப்போதும் சொல்வது போலத்தான் ஆண்டவன் அருளால் ரஜினி சார் எப்போதுமே நன்றாக இருப்பார். அவருக்கு ஒன்றுமே ஆகாது. அப்பல்லோவில் அவர் அனுமதிக்கப்பட்டது ஏற்கனவே திட்டமிட்ட சிகிச்சை தான். தயவு செய்து எதுவுமே தெரியாமல் பக்கத்தில் இருந்து பார்த்தது போல தப்பு தப்பாக பேச வேண்டாம். அது எங்களை மனதளவில் ரொம்பவே பாதிக்கிறது என லோகேஷ் கனகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











