Lokesh Kanagaraj - கைதி 2 ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கும்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) கைதி திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ஸ்ட்ராங்காக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.

Lokesh Kanagaraj Speech about Kaithi 2 in Japan Movie Audio Launch

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என லோகேஷ் கனகராஜ் இயக்கிய நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. அவரது இயக்கத்தில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் படத்துக்கு சென்றனர். ஆனால் விஜய் ரசிகர்களை தவிர மற்றவர்களை படம் பெரிதாக இம்ப்ரெஸ் செய்யவில்லை. அதனால் கலவையான விமர்சனத்தையே படம் பெற்றிருக்கிறது.

அடுத்த படம்: லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி 2 படத்தை இயக்குவார் என முதலில் கூறப்பட்டது. அது கன்ஃபார்ம்தான் என்றாலும் அதற்கு முன்னதாக ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்க்ரீன் ப்ளேவில் மேஜிக்: அவருக்கு ஏற்பட்டிருக்கும் டிமாண்டிற்கு காரணம் அவர் உருவாக்கி வைத்திருக்கும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ்தான். தமிழ் சினிமாவுக்கு புதிதான அந்த விஷயத்தை விக்ரம் படத்தில் ரொம்பவே இயல்பாக சாதித்துக்காட்டிவிட்டார். ஆனால் லியோ படத்தில் எல்சியூ ஒர்க் அவுட் ஆகவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.

ஜப்பான்: இந்நிலையில் ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் லோகேஷ் கனகராஜ், சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்த மேடையில் கைதி 2 படம் பற்றிய அப்டேட்டை தரமாக கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் பேசுகையில், "ஒரு இயக்குநருடைய வாழ்க்கையில் திருப்புமுனை வர வேண்டுமெனில் அதற்கான பரிசோதனை முயற்சிக்கு பெரிய நடிகர் ரெடியாக இருக்க வேண்டும்.

Lokesh Kanagaraj Speech about Kaithi 2 in Japan Movie Audio Launch

கார்த்தி: என்னுடைய திரைப்பயணத்தில் அப்படிப்பட்ட நடிகர்தான் கார்த்தி. அவர் நடித்திருக்கும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டது எனக்கு பெருமையாக இருக்கிறது. எனக்கு கைதி திரைப்படம் Game Changing.அந்தப் படத்தின் கதையை ஐந்து வருடங்களுக்கு முன்பு எழுதியதால் அதில் பெரிதாக திணிக்க விரும்பவில்லை. ஆனால் கைதி படத்தின் இரண்டாம் பாகம் ரொம்பவே ஸ்ட்ராங்காக இருக்கும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X