அடி வாங்கிட்டே இருக்கேன் டா.. லோகேஷ் கனகராஜிடம் ஓபனாக கூறிய ஸ்ரீ.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் மிக பிரபலமடைந்த ஸ்ரீ; வழக்கு எண் 18/9 படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்த அவர்; திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கினார். எல்லோரும் அவரை பெரும்பாலும் மறந்திருந்த நேரத்தில் அவரது புகைப்படங்கள் வெளியாகி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தின.
சின்னத்திரையில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமானவர் ஸ்ரீ நடராஜன். அந்த சீரியல் பெற்ற வெற்றியின் காரணமாக சினிமா கதவுகள் அவருக்கு திறந்தன. அதன்படி பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது; அதனைத் தொடர்ந்து சிறந்த இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
வரிசையாக படங்கள்: இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் நடித்தார் ஸ்ரீ. அப்படமும் சூப்பர் ஹிட்டடித்து அவருக்கு வளமான எதிர்காலம் சினிமாவில் இருக்கிறது என்பதை உணர்த்தியது. அப்படத்துக்கு பிறகு அவர் இறுகப்பற்று படமும்கூட விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டு; ஸ்ரீக்கு நல்ல பெயரைத்தான் பெற்றுக்கொடுத்தது. ஆனால் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

அவல நிலை: கிட்டத்தட்ட எல்லோருமே பெரும்பாலும் அவரை மறந்திருந்த சூழலில்தான்; அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டார். அதில் ஆளே உருக்குலைந்து காணப்பட்ட அவர்; சில ஆபாசமான செய்கைகளையும் செய்திருந்தார். அவரது அந்தப் பதிவுக்கு பிறகு கோலிவுட்டில் பெரும் பரபரப்பு கூட்டிய தலைப்பு செய்தியாக மாறினார் அவர். லோகேஷ் உள்ளிட்டோர் அவரை மீட்க வேண்டும் என பலரும் கூறினார்கள்.
மீட்ட லோகேஷ்: ஸ்ரீயும், லோகேஷ் கனகராஜும் நெருங்கிய நண்பர்கள். அந்த உணர்வு அழியாமல் லோகிக்குள் இருப்பதால்; அவர் உடனடியாக தனது மற்ற சில நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு; ஸ்ரீயை அவல நிலையிலிருந்து மீட்டு சிகிச்சைக்கு உதவினார். இப்போது மெல்ல மெல்ல பழைய நிலைமைக்கு திரும்பும் அவர்; விரைவில் மீண்டும் சினிமாவில் நடிக்கவிருக்கிறார் என்றும்; கண்டிப்பாக இந்த இன்னிங்ஸில் அவரது ஆட்டம் வேறு மாதிரியாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜின் பேட்டி: இந்நிலையில் கூலி படத்தின் ப்ரோமோஷனில் இப்போதிருந்தே கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கும் லோகேஷ், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நான் எடுத்த படங்களிலேயே மாஸ் சீன் என்றால் மாநகரம் படத்தில் சார்லிக்காக ஸ்ரீ அடி வாங்கிய சீன்தான். அந்த சீன் எடுப்பதற்கு முன்னதாக அவர் என்னிடம் வந்து, 'டேய் மச்சான் படம் முழுக்க அடி வாங்கிக்கொண்டே இருக்கிறேன். இப்போது அவரை காப்பாற்ற போகும்போது நான் மீண்டும் அடிக்கவா?" என்று கேட்டார்.
வீரம்னா என்னனு தெரியுமா?: ஆனால் நானோ, இல்லை நீ மற்றவர்களை அடிப்பதைவிடவும்; மற்றவருக்காக நீ அடி வாங்குவதுதான் வீரம். அதுதான் சரியாக இருக்கும் என்று சொன்னேன். பிறகு அவர் நடித்தார். இந்த மாதிரி ஒரு சீனை ஸ்ரீயை வைத்துதான் செய்ய முடியும். பெரிய ஹீரோக்களை வைத்து சான்ஸே இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











