Rajinikanth: கூலி படத்தில் எத்தனை ரஜினி? சூட்டிங் ஸ்பாட்டில் வதவதனு இருக்காங்களாமே? இதுதான் விஷயமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வேட்டியன். இப்படம் கிட்டத்தட்ட பாக்ஸ் ஆஃபீஸில் ரூபாய் 400 கோடிகள் வரை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் கூலி. இப்படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகின்றார். படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின்மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, படப்பிடிப்புத் தளத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரஜினிகாந்த் இருக்கின்றார்கள், படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எத்தனை கதாபாத்திரன்களில் நடிக்கின்றார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சன் பிக்சர்ஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் கூட்டணி இணைந்து ஜெயிலர் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தனர். அதன் பின்னர் இவர்கள் மீண்டும் இணைந்துள்ள படம் கூலி. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கின்றார் என்பதோடு பலருக்கும் மகிழ்ச்சி அளித்த செய்தி என்னவென்றால், அது, படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பதுதான். மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கூட்டணியில் வெளியான மாஸ்டர், விக்ரம், லியோ படங்கள் வசூலில் மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றிருந்தது.

அப்டேட்: படக்குழு தரப்பில் வெளியிடப்பட்ட அப்டேட்களில், மலையாள சினிமாக்களில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி பெரும் பாராட்டுகளைப் பெற்று வரும் நடிகரான சௌபின் சாஹிர் கூலி படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என படக்குழு தெரிவித்திருந்தது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா கூலி படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என தெரிவித்தது. நடிகர் சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

படப்பிடிப்பு: அதேபோல் உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சூப்பர் ஸ்டார் இந்தப் படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். கூலி படத்தின் படப்பிடிப்பு பகுதியில் இருந்து நாகர்ஜுனா நடிக்கும் காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது. இது படக்குழுவினரை அப்செட் ஆக்கியது. இதுமட்டும் இல்லாமல், இதற்காக மிகவும் வருத்தத்துடன் லோகேஷ் கனகராஜ் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது எனக் கூறப்படுகின்றது. கூலி படப்பிடிப்புக்கு மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதற்காகவும் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

4,5 ரஜினி: தீபாவளிக்கு படக்குழு சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது இணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் என ஒரு பெரும் பட்டாளமே கருப்பு நிற உடை அணிந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்து புகைப்படம் வெளியிட்டனர். இந்நிலையில் புதிய தகவல் ஒன்று உலா வருகின்றது. அதாவது கூலி படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சுமார் 4 முதல் 5 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளார்களாம். இதனால் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல கதாபாத்திரங்களில் நடிக்கின்றாரா என சிலர் குழம்பிப் போயுள்ளார்கள். ஆனால், விசாரித்துப் பார்த்ததில் இது அவர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு டூப் எனத் தெரியவந்துள்ளதாக வலைபேச்சு யூடியூப் தளத்தில் கூறப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











