சோஷியல் மீடியாவுக்கு ரெஸ்ட் விட்ட லோகேஷ் கனகராஜ்.. கடைசியாக போட்ட மாநகரம் ஸ்ரீ போஸ்ட்.. என்ன ஆச்சு?

சென்னை: கூலி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படப்பிடிப்பை தொடங்கிவிட்டார். கூலி படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷனில் பிசியாக உள்ள லோகேஷ் கனகராஜ் திடீரென இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ட்வீட் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் அறிமுகமான மாநகரம் படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீ சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் மெலிந்த நிலையில், ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவர் தமிழ்நாட்டிலேயே இல்லை என்று சில தகவல்கள் வெளியாகின.

Lokesh Kanagaraj takes a short break on Social Media for Coolie post production

கடைசியாக லோகேஷ் கனகராஜ் ஸ்ரீராமை கண்டு பிடித்து விட்டோம் என்றும் அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். அவர் குறித்து எந்தவொரு தவறான தகவலையோ, வதந்திகளையோ பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் இப்படியொரு ட்வீட்டை அவர் போட்டுள்ள நிலையில், நெட்டிசன்கள் திடீரென என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

லியோ விமர்சனங்கள்: மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வந்தார். கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான லியோ படத்தை பார்த்த பலரும் 2ம் பாதி சொதப்பி விட்டது என கடுமையாக விமர்சித்தனர். விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் அளித்த பேட்டிகளும் லோகேஷ் கனகராஜை ரொம்பவே அப்செட் ஆக்கியது. அதன் காரணமாகவே சோஷியல் மீடியாவில் அதிகம் கவனம் செலுத்தாமல் கூலி படத்தை பிரம்மாண்டமாக கடுமையான உழைப்பைக் கொட்டி லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

ரஜினிகாந்த் முதல் அமீர்கான் வரை: இந்திய சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரை வைத்து படமெடுப்பதே குதிரை கொம்பான விஷயம். அந்த நடிகர்களையும், நடிகர்களின் ரசிகர்களையும் கட்டுப்படுத்துவது ரொம்பவே சவாலான விஷயம். கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் வரை பல பிரபலங்களை சமாளித்து கூலி படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

சோஷியல் மீடியாவுக்கு ரெஸ்ட்: கூலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், கூலி படத்தின் புரமோஷன் பணிகளின் போது மீண்டும் சோஷியல் மீடியா பக்கம் வருகிறேன். இப்போதைக்கு சில மாதங்கள் சோஷியல் மீடியா பக்கம் வரமாட்டேன் என லோகேஷ் கனகராஜ் சற்றுமுன் எக்ஸ் தளத்தில் ட்வீட் போட்டு அறிவித்துள்ளார்.

மாநகரம் ஸ்ரீ பற்றி: கடைசியாக ஏப்ரல் 18ம் தேதி நடிகர் ஸ்ரீயை கண்டு பிடித்து மருத்துவமனையில் சேர்த்துவிட்டோம். அவர் குணமாகி வருகிறார். அவரை பற்றிய அவதூறு கருத்துக்களையோ, தவறான தகவலையோ யாரும் பதிவிட வேண்டாம் என்றும் மீடியா மற்றும் யூடியூப் சேனல்களுக்கு லோகேஷ் கனகராஜ் கோரிக்கை வைத்திருந்தார். தொடர்ந்து ஸ்ரீ பற்றிய கேள்விகளை லோகேஷ் கனகராஜை டேக் செய்து நெட்டிசன்கள் கேட்டு வந்த நிலையில், தான் இப்படியொரு அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும், ரொம்ப நாளாவே லோகேஷ் கனகராஜ் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாகவே இல்லை என்றும் ஏன் திடீரென இப்படியொரு போஸ்ட் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X