கூலி படத்தில் இவ்வளவு வேலைகள்தான் பாக்கி.. ஓபனாக பேசிய லோகேஷ் கனகராஜ்

சென்னை: வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு உருவாகிவரும் படத்தின் மீது உச்சக்கட்ட ஆவல் இருக்கிறது. இந்தச் சூழலில்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கடந்த மாதம் பத்தாம் தேதி வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ரஜினிக்கு தேவையான மாஸ் மொமண்ட்டுகள் அதிகம் இருப்பதாக ரசிகர்கள் கூறினர்.மேலும் சமூகத்துக்கு தேவையான கதையை சரியான நேரத்தில் ஞானவேல் ரஜினிகாந்த்தை வைத்து கொடுத்திருக்கிறார். இதனால் அவரது முக்கியத்துவம் சினிமாவில் மேலும் உயர்கிறது என்று ரசிகர்கள் கூறினார்கள்.

coolie rajinikanth lokesh kanagaraj

கூலி: வேட்டையன் படத்தை முடித்திருக்கும் ரஜினி இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் ரஜினியுடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில்கூட நடிகர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்கான அறிவிப்பு போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பின.

தேவா ரஜினி: இப்படத்தில் ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். ஏற்கனவே தளபதி படத்தில் அவர் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்தப் படமும், அதில் ரஜினிகாந்த்தின் நடிப்பும் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கூலி படத்திலும் தேவாவாக ரஜினிகாந்த் கலக்குவாரா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இப்போது மோஸ்ட் வாண்டட் இயக்குநராக இருக்கும் லோகேஷுடன் ரஜினிகாந்த் முதன்முறையாக இணைந்திருப்பதாலும் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

ஷூட்டிங் அப்டேட்: லோகேஷின் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. எனவே கூலி படத்தில் கம்பேக் கொடுக்க வேண்டுமென்ற முனைப்பில் லோகேஷ் தீவிரமாக உழைத்திருக்கிறார் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. படத்தின் ஷுட்டிங் விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடந்தது. ரஜினி, நாகார்ஜுனா உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

மீண்டும் எப்போது: இந்நிலையில் கூலி படத்தின் ஷூட்டிங் குறித்து லோகேஷ் கனகராஜ் சில விஷயங்களை பேசியிருக்கிறார். அதுகுறித்து அவர் பேசுகையில், "கூலி படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு ஷெட்யூல்கள் மட்டுமே பாக்கியிருக்கின்றன. 2025ஆம் ஆண்டு கூலி படம் வெளியாகும். அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X