Lokesh Kanagaraj - லோகேஷ் கனகராஜுக்கு கமல் கொடுத்த ஷாக் சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கமல் ஹாசன் கொடுத்த ஷாக் குறித்த தகவல் தெரியவந்திருக்கிறது.

வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது களம் என்ற குறும்படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். அது கொடுத்த நம்பிக்கையை அடுத்து மாநகரம் படத்தை இயக்கினார். முதல் படம் கதை மற்றும் மேக்கிங் என அனைத்திலுமே சிறப்பாக வந்ததால் பலரிடம் கவனம் ஈர்த்தது. அதனையடுத்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. இதன் காரணமாக முன்னணி இயக்குநர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

 Lokesh Kanagaraj Talks about Kamal haasan and Vikram Movie

மாஸ்டர் ஹிட்: தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட்டாகிவிட்டதால் மூன்றாவது படத்தை விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு அமைந்தது. மாஸ்டர் படத்தில் அதுவரை யாரும் பார்க்காத விஜய்யை ரசிகர்களுக்கு காட்டினார் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக ஹீரோவின் பெயர் விளக்கம் இல்லாதது, ப்ளாஷ்பேக் எதுவும் இல்லாதது என பல விஷயங்கள் படத்தில் புதிதாக இருந்தது. படமும் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது.

மெகா ப்ளாக் பஸ்டர் விக்ரம்: மாஸ்டர் படமும் மெகா ஹிட்டாகிவிட்டதால் கோலிவுட் எங்கும் லோகேஷ் பெயரே ஒலிக்கப்பட்டது. அந்தப் படத்துக்கு பிறகு கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மேலும், திரைக்கதையில் அவர் நிகழ்த்திய மேஜிக் பயங்கரமாக ஒர்க் அவுட் ஆக 400 கோடி ரூபாய் வரை வசூலித்து இந்திய அளவில் லோகேஷை அறியப்படும் இயக்குநராக மாற்றியது.

கமல் கொடுத்த ஷாக்: இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் இப்போது ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "விக்ரம் படத்தோட முதல் நாள் ஷூட்டிங்குல பர்ஸ்ட் ஷாட் உடனடியாக வைக்கவில்லை. மேக்கப் போடுவதற்காக கமல் ஹாசனை காலை 9 மணிக்கு வரச்சொல்லி இருந்தோம். அவர் 8.45 மணிக்கே வந்துவிட்டார்.. நான் ஏவிஎம்மில் போடப்பட்டிருந்த செட்டுல அங்க இங்க சுத்திட்டு இருந்தேன்.

 Lokesh Kanagaraj Talks about Kamal haasan and Vikram Movie

முதல் ஷாட்: அப்போ, கமல் சார் என்னை கூப்பிட்டு, இந்த ப்ளோர் நீ சூஸ் பண்ணுனியா இல்லே புரொடக்‌ஷன்ல இருந்து சென்டிமெண்ட்டா எதுவும் சொன்னாங்களானு என்கிட்ட கேட்டாரு. இல்ல சார், புரொடக்‌ஷன்ல இருந்து எதுவும் சொல்லல. என்னோட வசதிக்காகதான், ஏவிஎம்ல இந்த இடத்தை தேர்வு செஞ்சேன்னு சொன்னேன். அப்போ அவர், இல்லே 36 வருடங்களுக்கு முன்னால், இதே இடத்துலதான் அந்த விக்ரம் படத்தோட முதல் ஷாட் எடுத்தேன் என்றார்.

நினைத்துக்கூட பார்க்கல: என்னால் அதை நம்ப முடியல. அதிர்ச்சியா இருந்துச்சு. கரெக்ட்டா நான் பிறக்கறதுக்கு ரெண்டு, மூனு மாசத்துக்கு முன்னால இது நடந்துருக்கு. எனக்கு பெரிய ஆச்சரியமா இருந்துச்சு, நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை' என்றார். லோகேஷ் கனகராஜ் இப்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். படம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X