Leo Lokesh Kanagaraj - லியோவுக்கான தியேட்டர் பிரச்னை 7 மணிக்குள் தீரும்.. லோகேஷ் கனகராஜ் நம்பிக்கை

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) லியோவுக்கான தியேட்டர் பிரச்னை இன்று மாலை 7 மணிக்குள் தீர்ந்துவிடும் என்று லோகேஷ் கனகராஜ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

லியோ படம் நாளை ரிலீஸ் ஆகவிருக்கிறது. படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கினாலும் அந்தக் காட்சியை காலை 9 மணிக்குத்தான் திரையிட வேண்டும் என கூறியது. துணிவு படத்தின் சிறப்பு காட்சியில் நிகழ்ந்த விபத்துதான் இதற்கு முழு காரணம் என கருதப்படுகிறது.

Lokesh Kanagaraj Talks about Leo Movie Theatre Controversy

நீதிமன்றம் அறிவுறுத்தல்: ஆனால் அதிகாலை காட்சிதான் தங்களுக்கு வேண்டும் என்பதில் படக்குழு பிடிவாதமாக இருந்தது. அதன் காரணமாக பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்திற்கும் சென்றது. ஆனால் நீதிமன்றமோ அதிகாலை காட்சிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றும் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி வேண்டுமென்றால் தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியது..

7 மணி காட்சியும் இல்லை: இதனையடுத்து பட தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் குழு நேற்று தலைமை செயலாளரை சந்தித்து காலை 7 மணி காட்சிக்கு அனுமதி வேண்டும் என்று மனு அளித்தது. எப்படியும் 7 மணி காட்சிக்கான அனுமதி கிடைத்துவிடும் என்று படக்குழு எதிர்பார்த்திருந்தது. ஆனால் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என்று உறுதிபட தமிழ்நாடு அரசு தெரிவித்துவிட்டது.

இன்னொரு பிரச்னை பிரச்னை: இதற்கிடையே லியோ படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமே நேரடியாக ரிலீஸ் செய்கிறது. இதனையடுத்து தயாரிப்பு தரப்பு தியேட்டர்களிடம் 80 சதவீதம் பங்கு தொகை கேட்பதாகவும் ஆனால் திரையரங்குகளோ 60 சதவீதம்தான் கொடுப்போம் என்று தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் திருச்சி சாந்தி சினிமாஸும், சென்னை ரோகிணி தியேட்டரும் லியோ படம் திரையிடப்படாது என்று தெரிவித்துள்ளன. முக்கியமாக ரோகிணி தியேட்டரின் இந்த முடிவு விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட ஷாக்காக்கி இருக்கிறது.

லோகேஷ் நம்பிக்கை: இந்நிலையில் நாளை படம் ரிலீஸாவதை முன்னிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தியேட்டர் பிரச்னை குறித்து பேசிய அவர், " படத்தை இயக்குவது மட்டும்தான் எனது வேலை. வியாபாரம் என்பது தயாரிப்பு தரப்பு வேலை. இதுதான் முடிவு என்பது இல்லை. எல்லாரும் ஒரு டெர்முக்குள் வருவார்கள். தியேட்டர் இல்லாமல் நாங்கள் படம் பண்ண முடியாது.

இதெல்லாம் இயல்புதான்: படம் இல்லாமல் வெறும் தியேட்டரை வைத்திருக்க முடியாது. எல்லா பிரச்னையும் 7 மணிக்குள் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன். ஹை பிரஷர் படங்களுக்கு இது நடப்பதெல்லாம் இயல்புதான்" என்றார். லோகேஷ் கனகராஜின் இந்த பதில் விஜய் ரசிகர்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X