அப்போ அது உறுதியா.. இப்படி சொல்லியிருக்கிறாறே லோக்கேஷ் கனகராஜ்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை இயக்கப்போவதாக பரவி வரும் தகவல் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்,
Recommended Video
தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவரது முதல் படமான மாநகரம் படத்தை பார்த்தே அவரை அழைத்து வாய்ப்பு கொடுத்தார் நடிகர் விஜய்.
லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து இயக்கிய மாஸ்டர் படம் லாக்டவுன் காரணமாக இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதியும் ரசிகர்களின் பாராட்டை பெற்று சக்கைப் போடு போட்டது.

லோகேஷ் கனகராஜ் பேட்டி
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் விஜயை வைத்து அவர் படம் இயக்க போவதாக தகவல் வெளியானது. அதுகுறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லாத நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

தயாரிப்பு நிறுவனம்
அதில் தனது மாஸ்டர் படம் குறித்தும், விஜயுடனான தனது பணி அனுபவம் குறித்தும் பேசியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடனான அவரது படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், தயாரிப்பு நிறுவனம் இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும், அனைத்து ஒப்பந்தங்களும் முடிந்ததும் அவர்கள் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் கூறினார்.

பேச்சுவார்த்தை?
லோகேஷ் கனகராஜின் இந்த பதில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை இணைத்து இயக்க போகிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே உள்ளது. மேலும் லோகேஷின் இந்த தகவல் அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதை உணர்த்தும் வகையிலும் உள்ளது.

தெலுங்கு தயாரிப்பு
இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இந்த லாக்டவுன் நேரத்தில் மற்றொரு படத்தின் பணியை தொடங்கியுள்ளார். மேலும் பிரபலமான தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தை இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிப்புகளால் ஆச்சரியம்
மேலும் படங்களை இயக்க பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் அவரை அணுகி இருப்பதாகவும், லாக்டவுன் முடிந்த பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேக் டு பேக் அறிவிப்புகளால் ரசிகர்களை திக்குமுக்காட செய்யப்போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











