கூலி படத்தின் இடைவேளை சீன் இதுதான்.. கமலுக்கு எதிராக ரஜினி..லோகேஷ் கனகராஜ் என்னங்க இப்படி ஸ்பாய்லர் பண்றாரு!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 50 வது ஆண்டில் வெளியாகவுள்ளதால் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் சாகிர், உபேந்திரா, நாகர்ஜுனா, அமீர் கான் என பலரும் படத்தில் நடித்துள்ளார்கள். படத்தின் புரோமோஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் இடைவேளை காட்சி குறித்து பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து கொண்டுள்ளார்.
லோகேஷ் கனராஜ் படம் என்றாலே பல டெம்ப்ளேட்கள் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் லோகேஷ் கனராஜ் ஒரு ஆக்ஷன் படத்திற்கு பயன்படுத்தும் டெம்ப்ளேட்களை மற்ற இயக்குநர்களும் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக உணவை மிகவும் ரசித்து சாப்பிடுவது. இரவு நேர சண்டைக் காட்சிகள், ரெட்ரோ பாடல்களை படத்தில் இடம் பெறச் செய்வது என லோகேஷ் கனகராஜ் தனக்கென தனி டெம்ப்ளேட்கள் வைத்துள்ளார். ஆனால் அது இன்றைக்கு பலரும் பயன்படுத்துவதால், கூலி படத்தில் வேறு சில டெம்ப்ளேட்களை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தி உள்ளாதாக விஜய் டிவி கோபிநாத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

கமல் - ரஜினி: மேலும் படம் தொடர்பான புரோமோஷன் வீடியோவில் ரஜினிகாந்த் முடிச்சிடலாம் எனக் கூறுவார். அது ரசிகர்கள் மத்தியிலும் இணையத்திலும் டிரெண்ட் ஆனது. குறிப்பாக விக்ரம் படத்தில் கமல்ஹாசன் ஆரம்பிக்கலாமா எனக் கூறுகிறார். ஆனால் கூலி படத்தில் ரஜினிகாந்த் முடிச்சிடலாம் எனக் கூறுகிறார். அப்படியானால் இந்த இரண்டு படங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்விகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
கூலி இடைவேளை காட்சி: விஜய் டிவி கோபிநாத்திற்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். அந்த பேட்டியில் இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். ரஜினி சாரிடம் தான் கதை சொல்லும்போதே நான் கமல்ஹாசன் ரசிகன் எனக் கூறிவிட்டுத்தான் கதையே சொன்னேன். அப்படி இருக்கும்போது, விக்ரம் படத்தில் கமல்ஹாசன் சாருக்கு ஆரம்பிக்கலாமா என்று டயலாக் வைத்தேன். அதுவும் அந்த டயலாக்கை அவர் இடைவேளை காட்சியில் கூறுவார். அதேபோல் இந்த படத்திலும் ரஜினி சாருக்கு, வைத்த டயலாக் தான் முடிச்சுடலாம் என்பது. இந்த டயலாக்கை ரஜினி சார் இடைவேளை காட்சியில்தான் கூறுகிறார்" என்று கூறியுள்ளார்.

ஸ்பாய்லர்: இணையவாசிகள் மத்தியில் தற்போது, லோகேஷ் கனகராஜின் இந்த பேட்டி வேகமாக பரவி வருகிறது. இது மட்டும் இல்லாமல், லோகேஷ் கனகராஜ் என்ன, தனது படத்தின் இடைவேளை காட்சி குறித்து அவரே சொல்லிவிட்டாரே எனவும் விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











