தலைவர் 171 ஷூட்டிங் எப்போ தெரியுமா?.. லோகேஷ் கனகராஜ் சொன்ன செம விஷயம்

சென்னை: ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. கண்டிப்பாக கமர்ஷியல் ப்ளஸ் சோஷியல் மெசேஜுடன் படம் உருவாகும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார் ரஜினி. இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று லோகேஷ் கனகராஜ் இப்போது தெரிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் கடைசியாக ஹீரோவாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது. இதனால் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்த கலாநிதி மாறன் ரஜினிக்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்றை பரிசாக அளித்தார்.

Lokesh Kanagaraj Talks about Rajini s Thalaivar 171 Shooting Update

வேட்டையன்: ஜெயிலர் படத்துக்கு பிறகு கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படம் படுதோல்வியடைந்தது. தற்போது அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். ஆனால் கண்டிப்பாக சோஷியல் மெசேஜ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட ஆவலோடு இருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள்.

தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. கமல் ஹாசனுக்கு எப்படி ஒரு மெகா ஹிட்டை கொடுத்தோமோ அதேபோல் ரஜினிகாந்த்துக்கும் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் தனது டீமுடன் வேலையில் இறங்கியிருக்கிறார் லோகி. கதை விவாதத்துக்காக ஒரு பிரமாண்ட வீட்டை ஆஃபிஸாக போட்டுக்கொடுத்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்

எப்போது ஷூட்டிங்: இந்நிலையில் தலைவர் 171 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது. தற்போது அதுகுறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கமளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ரஜினியுடன் இணையும் தலைவர் 171 படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கிவிடும். இந்தப் படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகளுக்காக மட்டும் ஐந்து மாதங்கள் எடுத்துக்கொண்டோம்" என்றிருக்கிறார். இதற்கிடையே படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகலாம் என ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தலைவர் 171 படத்தை இதுவரை இல்லாத ஸ்டைலில் எடுக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள், அப்போ தலைவர் 171 படம் எல்சியூவில் வராதா என்று இப்போதே கேள்விகள் கேட்க ஆரம்பித்திருக்கின்றனர். எது எப்படியோ இந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆக வேண்டுமென்பதுதான் பலரின் விருப்பமாக இருக்கிறது. லியோவில் விட்டதை தலைவர் 171ல் பிடிப்பாரா லோகேஷ்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X