தலைவர் 171 படத்தின் நிலை என்ன?.. லோகேஷ் கனகராஜ் சொன்ன சூப்பர் அப்டேட்

சென்னை: Thalaivar 171 Update (தலைவர் 171 அப்டேட்) தலைவர் 171 படம் குறித்து லோகேஷ் கனகராஜ் சூப்பர் அப்டேட் ஒன்றை சொல்லியிருக்கிறார்.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இதுவரை மொத்தம் ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியானது. விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்திருந்த அத்திரைப்படம் விமர்சன ரீதியாக அடிவாங்கியது. இருந்தாலும் வசூல் ரீதியாக படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாகவும் 600 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Lokesh Kanagaraj Talks about Thalaivar 171 Movie Update

தலைவர் 171: இதற்கிடையே லியோ திரைப்படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அதற்குள் ரஜினியை வைத்து படம் இயக்க கமிட்டாகிவிட்டார் அவர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு தலைவர் 171 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பு: லோகேஷ் கனகராஜ்தான் இப்போது கோலிவுட்டின் டாப் இயக்குநர் என்பதால் ரஜினியுடன் அவர் இணையும் தலைவர் 171க்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. கமல் ஹாசனுக்கு விக்ரம் படத்தின் மூலம் பிரமாண்ட வெற்றியை எப்படி லோகேஷ் கொடுத்தாரோ அதேபோல் ரஜினிகாந்த்துக்கும் கொடுப்பார் என்றும் ரஜினி ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

அப்டேட்: இந்த சூழலில் தலைவர் 171 படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் நடித்திருக்கும் அவள் பெயர் ரஜினி என்ற படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார். அதனையடுத்து அவரிடம் தலைவர் 171 படத்தின் அப்டேட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தலைவர் 171 படத்துக்கான கதையை அடுத்த வாரம் முதல் எழுத தொடங்குகிறேன்.

ஷூட்டிங் எப்போ?: லியோ படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்ததால் அப்போது கதையை எழுத முடியவில்லை. படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும்” என்றார். முன்னதாக லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றும் இயக்குநர் ரத்னகுமார் இந்தப் படத்திலிருந்து தூக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

தலைவர் 170: ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு இப்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170ஆவது படத்தில் நடித்துவருகிறார். திருவனந்தபுரம், கன்னியாகுமர், மும்பை உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடந்தது. இதில் ஃப்கத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X