எனக்கு அதை முதலில் சொல்லியதும், வாழ்த்தியதும் விஜய்தான்.. மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்

சென்னை: கோலிவுட்டின் சென்சேஷனல் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இப்போது ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கிவருகிறார். கண்டிப்பாக இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார் லோகி. படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் அவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விஜய் குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்திலேயே தன்னை ஒரு நல்ல இயக்குநர் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். அந்தப் படத்தை பார்த்த பலரும் கண்டிப்பாக இந்த இயக்குநர் பெரிய ஆளாக வருவார் என்று கணிக்க ஆரம்பித்தனர். அந்த கணிப்பை சரியாக்கும் விதமாக அமைந்தது அவரது இரண்டாவது படமான கைதி. கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆகி ஒரே இரவில் லோகேஷின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றது.

முன்னணி ஹீரோக்களுடன்: இதனையடுத்து விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர் என்ற பெயரை பெற்றார் லோகேஷ். தொடர்ந்து தனது ரோல்மாடலான கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். விமர்சன ரீதியாக ஒரு தரப்பிடம் அந்தப் படம் அடி வாங்கினாலும் பெரும்பாலானோரிடத்தில் படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. 400 கோடி ரூபாய்வரை வசூலித்து இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநராக லோகேஷை மாற்றியது.

முதல் சறுக்கல்: இப்படி வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்த லோகேஷுக்கு முதல் சறுக்கலாக லியோ திரைப்படம் வெளியானது. கடந்த வருடம் வெளியான அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. பிளாஷ்பேக் விவகாரம், மனிதர்களை பலி கொடுக்கும் காட்சி விவகாரம், திரைக்கதை என பல விஷயங்கள் லோகேஷுக்கு எதிராக திரும்பின. முக்கியமாக பிளாஷ்பேக் விஷயம் லோகேஷை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. வசூல் ரீதியாக படம் ஓகேதான் என்றாலும் விமர்சன ரீதியாக படுத்துவிட்டது.

Lokesh Kanagaraj Talks about Vijay At latest Interview

எல்சியூ: முக்கியமாக லோகேஷ் கனகராஜின் பலங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது எல்சியூ. லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்ற கான்செப்ட் விக்ரம் படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ஆனால் லியோ திரைப்படத்தில் எடுபடவில்லை. மேலும் வேண்டுமென்றே இதில் எல்சியூவை லோகேஷ் திணித்திருக்கிறார் என்ற விமர்சனம்தான் மிஞ்சியது. இப்படி லியோவில் அவர் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தாலும் அவருக்கான டிமாண்ட் குறையவில்லை.

கூலி லோகேஷ் கனகராஜ்: இப்போது அவர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கியிருக்கிறார். லியோ படத்தில் சந்தித்த விமர்சனத்துக்கும், ட்ரோலுக்கும் கூலி படத்தில் பதிலடி கொடுக்க அவர் தயாராக இருக்கிறார் என்று திரைத்துறையினர் கூறிவருகிறார்கள். இப்படத்தில் ரஜினிகாந்த்துடன் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கண்டிப்பாக லோகேஷுக்கு மட்டுமின்றி ரஜினிக்கும் இப்படம் ஒரு வெற்றி படமாக அமைய வேண்டும் என்றும் ரசிகர்கள் கருதுகிறார்கள்.

Take a Poll

ஆகஸ்ட்டில் படம் ரிலீஸ்: படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பட ரிலீஸுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருப்பதால் அடுத்தடுத்த பணிகளை தீவிரமாக செய்கிறார் இயக்குநர். மேலும் வரும் நாட்களில் கூலி படத்தின் அப்டேட்டுகளும் வரிசையாக வரும் என்பதால் ரஜினி ரசிகர்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

லோகேஷின் பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "மாஸ்டர் திரைப்படத்தை விஜய்யை வைத்து இயக்கினேன். அந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோதுதான் விஜய் என்னிடம், 'நீ ரஜினியை வைத்து ஒரு படம் செய்' என்று கூறினார். அதற்கு நானோ, செய்ய வேண்டும் என்று ஆசைதான் அண்ணா. ஆனால் அவர் இருக்கும் ஏரியாக்குள்ளேயே என்னை விடுவாங்களானு சந்தேகம் என்று சொன்னேன். பிறகு கூலி படம் உறுதியானது. அந்த விஷயம் வெளியே தெரிந்ததும் முதல் ஆளாக எனக்கு ஃபோன் செய்து வாழ்த்து சொல்லியதும் விஜய்தான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X