அவர் வந்தா வேற லெவல்தான்.. விஜய் 64ல் மாஸ் என்ட்ரி கொடுக்கும் வில்லன்.. எகிறும் எதிர்பார்ப்பு!

Recommended Video

Thalapathy 64 Movie Update : Villain Announced?

சென்னை: தன்னுடைய 64வது படமாக விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தில் முக்கியமான நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படம் வேகமாக தயாராகி வருகிறது. அடுத்த வருடம் மே மாதத்திற்கு இந்த படம் குறி வைக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிக்கும் காட்சிகள் இந்த வருட இறுதியிலேயே முடிந்துவிடுமாம். அதன்பின் வில்லன் காட்சிகளை தனியாக எடுக்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இப்போது

இப்போது

அதன்படி விஜயும், வில்லன் பாத்திரமும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளை டிசம்பர் மாதம் எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதன்பின் விஜய் தனது 65வது படத்தில் நடிக்க சென்றுவிடுவார் என்று கூறப்படுகிறது. இதனால் படக்குழு பிரி புரொடக்சன் பணிகளை வேகமாக முடித்து வருகிறது.

யார் வருவார்

யார் வருவார்

தளபதி 64 படத்தின் வில்லன் யார் என்று இன்னும் முடிவாகவில்லை. இதற்காக இரண்டு பேரிடம் லோகேஷ் கனகராஜ் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் யாரையாவது வில்லனாக போட லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார்.

முதலில் யார்

முதலில் யார்

அதன்படி நடிகர் விஜய்க்கு கேரளாவில் பெரிய அளவில் ரசிகர் படை இருக்கிறது. அவரின் படங்கள் தமிழகத்திற்கு இணையாக அங்கு ஹிட் அடிக்கும். அதேபோல் கேரளாவில் தற்போது முன்னணி ஹீரோவாக டோவினோ தாமஸ் இருக்கிறார். இவர் கேரளாவின் விஜய் சேதுபதி போன்றவர்.

கண்டிப்பு

கண்டிப்பு

கண்டிப்பாக வாரம் ஒருமுறை இவரின் படம் ரிலீஸ் ஆகிவிடும். அதே சமயம் ரிலீஸ் ஆகும் அத்தனை படங்களும் இவருக்கு ஹிட் அடிக்கிறது. இவரை தளபதி 64 படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பேச்சு சென்று கொண்டு இருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தால் கேரளாவில் பெரிய ஹிட் அடிக்கும்.

நிறைய பேர் இருக்கிறார்கள்

நிறைய பேர் இருக்கிறார்கள்

அதேபோல் நடிகர் டோவினோவிற்கு தமிழிலும் நிறைய பெண் ரசிகைகள் இருக்கிறார்கள். அதேபோல் இவர் மாரி 2 படத்திலும் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு தமிழ் நடிகர் உடனும் வில்லன் கதாபாத்திரத்திற்காக தளபதி 64 குழுவினர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்னொருவர்

இன்னொருவர்

நடிகர் விஜய் சேதுபதி உடன் லோகேஷ் கனகராஜ் டீம் இதற்காக பேசி வருகிறது. ஆம் தளபதி 64 படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சு நடந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதி இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

செமையா இருக்கும்

செமையா இருக்கும்

விஜய் சேதுபதி விஜய் இருவரும் ஒரே படத்தில் நடித்தால் வேற லெவலில் இருக்கும். இன்னொரு பேட்ட படம் போல கலர்ஃபுல்லாக இருக்கும். அதனால் இப்போதே ரசிகர்கள் வில்லன் யார் என்று எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X