மாஸ்டர் எனும் இமயமலை.. அவங்க இல்லைன்னா இது சாத்தியமில்லை.. லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி!

சென்னை: மாஸ்டர் ஷூட்டிங் நிறைவடைந்ததையொட்டி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டைரக்‌ஷன் டீமுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Ponmagal Vandhal Official First Look | Jyothika | JJ Fedrick

மாநகரம், கைதி என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார்.

விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன் என பல திறமையான நடிகர்கள் முதன்முறையாக விஜய் படத்தில் இணைந்துள்ளனர்.

அந்த 129 நாட்கள்

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததை தனது டைரக்‌ஷன் குழுவுடன் கொண்டாடி உள்ளார் லோகேஷ் கனகராஜ். மொத்தம் 129 நாட்கள் எந்தவொரு ஓய்வையும் எடுக்காமல் இவர்கள் உழைத்துள்ளனர்.

இமயமலை

இமயமலை

தன்னை நம்பி இப்படி ஒரு பெரிய பொறுப்பை கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், தன்னோடு இணைந்து, இவ்வளவு பெரிய இமயமலை டாஸ்க்கை முடிக்க தனக்கு துணையாக இருந்த உதவி இயக்குநர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

செம ஸ்பீடு

செம ஸ்பீடு

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் வொர்க்கிங் ஸ்டைல் செம ஸ்பீடாக இருக்கும் என கைதி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியின் போது, நடிகர் கார்த்தி தெரிவித்திருந்தார். கமல் ரசிகரான லோகேஷ் கனகராஜ், தனது உழைப்பிலும் அவர் போல மிகுந்த ஈடுபாடு கொண்டவராக செயல் பட்டு வருகிறார்.

சம்மர் நம்மதான்

விஜய் கன்னத்தில் விஜய்சேதுபதி கொடுத்த முத்த புகைப்படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் தனது டைரக்‌ஷன் டீமுடன் எடுத்துக் கொண்ட க்ரூப் செல்ஃபியை பார்த்த விஜய் ரசிகர்கள், இந்த சம்மர் நம்மதான், மாஸ்டர் படத்துக்காக வெறித்தனமாக காத்துக்கிட்டு இருக்கோம், இசை வெளியீட்டு விழா எப்போ பாஸ் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சூப்பர் அண்ணா

லோகேஷ் கனகராஜின் ட்வீட்டை பார்த்த தளபதி ரசிகர்கள், உற்சாகமடைந்து அவரது நெகிழ்ச்சியான ட்வீட்டுக்கு கீழே தங்களின் அன்பான கமெண்ட்டுகளையும், எதிர்பார்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த ரசிகர், சற்று வித்தியாசமாய், கோப்ரா படத்தின் போஸ்டர் போல, தளபதி விஜய்யின் புகைப்படங்களை டிசைன் செய்து சூப்பர்னா என கொண்டாடி உள்ளார்.

வெயிட்டிங் தலைவா

இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் நடிகர்கள் பிரேம் குமார், ஷாந்தனு, ஸ்ரீமன், ஸ்ரீநாத், கெளரி கிஷன் மற்றும் ஸ்டன்ட் சில்வா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட இந்த ரசிகர், சம்மருக்கு வெயிட்டிங் தலைவா என கமெண்ட் செய்துள்ளார். அடுத்த மாதம் மாஸ்டர் படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

டபுள் ட்ரீட்

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், தளபதி விஜய் என்ன குட்டி கதை சொல்லப் போகிறாரோ என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக, விஜய்சேதுபதியும் செம மாஸ் ஸ்பீச் கொடுக்க உள்ளார் என இந்த ரசிகர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். பேட்ட படத்தின் இசை வெளியீட்டின் போதும், விஜய்சேதுபதி பேசிய பேச்சு வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் தான்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் நிச்சயம் ஏப்ரல் 9ம் தேதி தான் என தளபதி ரசிகர்கள் திட்டவட்டமாக முடிவு செய்துள்ளனர். ஏப்ரல் 9 மிஸ்ஸே ஆகாது என ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். மாஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட் எப்போ விடுவீங்க என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X