என் வெற்றிக்கு காரணம் அவள்.. லியோ இயக்குநரின் மனம் திறந்த பேட்டி!
சென்னை : என் வெற்றிக்கு காரணம் என் மனைவிதான் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மனம் திறந்த பேட்டி அளித்துள்ளார்.
முப்பத்தி ஏழே வயதான லோகேஷ் கனகராஜை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
1996ம் ஆண்டு பிறந்த லோகேஷ் கனகராஜ், ஒரு எம்பிஏ பட்டதாரி ஆவார். வங்கி ஊழியராகவும் பணியாற்றி உள்ளார்.

லோகேஷ் கனகராஜ்
திரைப்படங்களை தயாரிப்பதில் ஆர்வம் கொண்ட லோகேஷ், களம் என்ற குறும்படத்தை இயக்கினார். இந்த குறும்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனது அவியல் என்ற ஆந்தாலஜி படத்துடன் இணைந்தார். குறும்படத்தை தொடர்ந்து மாநகரம், கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களை வைத்து படங்களை எடுத்து வெற்றி பெற்ற உலகநாயகனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார்.

அதிரடி ஹிட் படம்
கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் அட்டகாசமான ஒரு படத்தை கொடுத்து பாக்ஸ் ஆபிசில் கல்லா கட்டினார். விக்ரம் படத்தில் லோகேஷின் LCO ஓர்க்கவுட்டாகி படத்தை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடினர்.இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 67வது படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்திற்கு லியோ என தலைப்பு வைக்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வெற்றிக்கு காரணம் அவள்
லோகேஷ் கனகராஜ் தனது மனைவி குறித்து பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது டிரெண்டாகி வருகிறது. அதில், நான் சினிமாவிற்கு வருவதற்கு முன், 70 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தேன், நான் வேலையை விட்டபோதும், என் மனைவி வேலைக்கு சென்று என் குடும்பத்தை கவனித்துக்கொண்டார். குழந்தை ஏழு மாதமாக இருக்கும்போது என்னுடைய மனைவி வங்கியில் பணியில் வேலை பார்த்தார். நான் இரண்டாவது படத்திற்கு கையெழுத்திட்ட போதுதான், என் மனைவி வேலையை விட்டார். இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்கும், என் வெற்றிக்கும் அவள் தான் காரணம் என்று தனது மனைவி குறித்து பேசி உள்ளார்.

திருமணம் ஆகிடுச்சா?
லோகேஷ் கனகராஜின் இந்த பேட்டியைப் பார்த்துத்தான், பலருக்கும் அவருக்கு திருமணமான விஷயமே தெரியவந்தது.கடந்த 2012 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ஐஸ்வர்யா என்பவரை லோகேஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அத்விகா மற்றும் ஆருத்ரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











