அடுத்த ஹிட்டிற்கு ரெடி...மற்றொரு பிரம்மாண்ட ஹீரோவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

சென்னை : கடந்த 2 நாட்களாக ஒட்டுமொத்த திரைத்துறையே லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தை பற்றி தான் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறது. 'மாஸ்டர்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, அனைவராலும் எதிர்பார்க்கப்படும் டைரக்டராக மாறி விட்டார் லோகேஷ் கனகராஜ்.

'மாஸ்டர்' படத்தில் தமிழில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய்யை நடிக்க வைத்து, அந்த படத்தை மெகா ஹிட் படமாக ஆக்கி விட்டார். இந்த படம் தியேட்டரிலும், ஓடிடி தளத்திலும் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிரபாஸை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

பிரபாஸை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

தற்போது தனது அடுத்த படத்தில் பிரபாஸை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். பொழுதுபோக்கு நிறைந்த ஆக்ஷன் படமாக இதனை இயக்க லோகேஷ் கவகராஜ் முடிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படத்தை வெளியிட்டு பான் இந்தியா படமாக மாற்ற நினைத்துள்ளனர்.

பிரபாஸூடன் சந்திப்பு

பிரபாஸூடன் சந்திப்பு

சில மாதங்களுக்கு முன், விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் ப்ரோமோஷனிற்காக லோகேஷ், ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது பிரபாஸை சந்தித்துள்ளார். இது யதார்த்தமான, சாதாரண சந்திப்பு தானாம்.

பிரபாஸின் மனம் கவர்ந்த கதை

பிரபாஸின் மனம் கவர்ந்த கதை

சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த போது லோகேஷ், பிரபாஸிடம் ஒரு கதையை கூறி உள்ளார். அந்த கதை பிரபாஸிற்கு மிகவும் பிடித்து விட்டதாம். இதனையடுத்து இருவரும் பேசி, இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர். லோகேஷின் அடுத்த படத்தில் நடிக்க பிரபாஸூம் ஓகே சொல்லிவிட்டாராம்.

இந்த ஆண்டு இறுதியில் அறிவிப்பு

இந்த ஆண்டு இறுதியில் அறிவிப்பு

இருவரும் தற்போது பணியாற்றி வரும் படங்களின் வேலைகளை முடித்த பிறகு, இந்த ஆண்டு இறுதியில் இவர்கள் இணையும் புதிய படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஐரோப்பாவில் 'ராதே ஷ்யாம்'

ஐரோப்பாவில் 'ராதே ஷ்யாம்'

லோகேஷ் கனகராஜ், தற்போது கமல் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்தின் ஆரம்ப கட்ட வேலைகளை கவனித்து வருகிறார். பிரபாஸ், 'ராதே ஷ்யாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக ஐரோப்பா சென்றுள்ளார். ரொமான்டிக் காதல் கதையான இந்த படத்தில் பூஜா ஹெக்டேவுடன் இணைந்து நடிக்கிறார் பிரபாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X