லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள்.. சென்சேஷனல் இயக்குநரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: லோகேஷ் கனகராஜ் கடைசியாக ரஜினிகாந்த் உள்ளிட்டோரை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கினார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருந்த அந்தப் படம் கடுமையான ட்ரோலை சந்தித்தது. அதிலும் லோகேஷை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைத்து செய்துவிட்டார்கள். கூலி கொடுத்த ரிசல்ட்டால் அவரது மார்க்கெட் சரிந்துவிட்டது என்பதுதான் எதார்த்தம். அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார். இந்நிலையில் இன்று அவர் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
மாநகரம் என்ற படத்தை கடந்த 2017ஆம் ஆண்டு ஸ்ரீ, சந்தீப், ரெஜினா உள்ளிட்டோரை வைத்து லோகேஷ் கனகராஜ் முதன்முதலில் இயக்கினார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. படத்தின் கதைக்களம், அதன் மேக்கிங், இயக்குநரின் எதார்த்தமான இயக்கம் என படத்தை பார்த்தவர்கள் இம்ப்ரெஸ் ஆகிவிட்டார்கள். முக்கியமாக இந்த இளைஞருக்கு தமிழ் சினிமாவில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றெல்லாம் ஆரூடம் கூறினார்கள்.

பலித்தது ஆரூடம்: அதற்கேற்றபடிதான் அவரது இரண்டாவது படம் அமைந்தது. எப்போதும் ஒரு இயக்குநருக்கு முதல் படத்தைவிடவும் இரண்டாவது படம்தான் பெரிய பெயரை பெற்றுத்தர வேண்டும் என்று அனைவருமே எதிர்பார்ப்பார்கள். அப்படிப்பட்ட பெயரைத்தான் லோகேஷுக்கு கைதி பெற்றுக்கொடுத்தது. ஒரே இரவில் நடக்கும் கதைக்களம் சரியான இடத்தில் ரெட்ரோ பாடலை ப்ளேஸ் செய்தது அதகளம் செய்திருந்தார் அதில். படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி; பெரிய ஹீரோக்களின் பார்வைகளை அவர் மீது திருப்பியது.
உச்சம் சென்ற லோகேஷ்: அந்தவகையில் விஜய்யை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம் படங்களை இயக்கினார். இரண்டுமே ப்ளாக் பஸ்டர்கள்தான். அதேசமயம் மாநகரம், கைதியில் இருந்த லோகேஷ் இதில் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனார். மாஸ் ஹீரோவுக்காக தன்னுடைய கதையிலும், திரைக்கதையிலும் காம்ப்ரமைஸ் செய்துகொண்டார். அதேசமயம் அதனை ஈடுகட்டும் விதமாக எல்சியூ என்ற ஒன்றை கொண்டு வந்து கோலிவுட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதனால் அவரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கவில்லை ரசிகர்கள்.
சறுக்கிய லோகேஷ் கனகராஜ்: ஆனால் அந்த எல்சியூ, லோகேஷ் மீதிருந்த ஹைப் ஆகியவைகளே அவருக்கு எதிராக இப்போது அமைய தொடங்கிவிட்டன. லியோ படத்தில் எல்லாம் வேண்டுமென்றே எல்சியூ, ரெட்ரோ பாடலை வைத்தது போன்ற பிம்பங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. இதனால் லியோவின்போதே லோகேஷை வெளுக்க தொடங்கிவிட்டார்கள். அந்தப் படத்துக்கு பிறகு ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கினார். அதுவும் படுதோல்வியைத்தான் சந்தித்தது.
லோகேஷ் சொத்து மதிப்பு: அடுத்ததாக அவர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் இன்று அவர் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். மேலும் அவரது மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி ஒரு படத்துகு 50 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. அவரிடம் மொத்தம் 70லிருந்து 80 கோடி ரூபாய் வரை சொத்து இருப்பதாகவும் திரைத்துறையில் பேச்சுக்கள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி லெக்சஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட சொகுசு கார்களையும் வைத்திருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications















