One Year Of Leo: ட்ரெண்டாகும் லியோ 2.. லோகேஷ் கனகராஜ் ட்வீட்.. தளபதி க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாரா?
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் லியோ. இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். படத்தினை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்தது. படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், தீபாவளிக்கு முன்னரே ரிலீஸ் ஆனது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. பாக்ஸ் ஆஃபீஸில் மட்டும் படம் கிட்டத்தட்ட ரூபாய் 650 கோடிகள் வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லியோ படத்தில், விஜய் ஒரே கதாபாத்திரத்தில் இரண்டு மாறுபட்ட தோற்றத்தில் லியோவாகவும் பார்த்திபனாகவும் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இவர்களின் காம்பினேஷனை திரையில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இதுமட்டும் இல்லாமல், படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், மடோனா சாபாஸ்டியன், அனுராக் காய்ஷப், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் என எக்கச்சக்க நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர்.

இதில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு தனித்தனி பி.ஜி.எம் அமைத்து அமர்க்களப்படுத்தியிருந்தார் அனிருத். இதுமட்டும் இல்லாமல் விஜய்யின் டைடில் கார்டு இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமாக அமைத்து அமர்க்களப்படுத்தினார். படம் முதல் நாளில் பாக்ஸ் ஆஃபீஸில் ரூபாய் 148.5 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படம் பாக்ஸ் ஆஃபீஸில் கிட்டத்தட்ட ரூபாய் 650 கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது. இதனால் படம் தமிழ்நாட்டில் பெரும் வசூலைக் குவித்த மூன்றாவது படமாகவும் மாறியது.

அனிருத்: படம் எல்.சி.யூவில் இடம் பெற்றுள்ளதால், படத்தில் விக்ரம் பட கதாபாத்திரங்கள் மற்றும் கைதி பட கதாபாத்திரங்கள் இடம் பெற்றது. இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்தது. படம் முடிந்து வெளியே வரலாம் என ரசிகர்கள் தயாரானபோது விக்ரம் படத்தின் பி.ஜி.எம் மற்றும் லியோ படத்தின் பி.ஜி.எம் என இரண்டையும் சேர்த்து கலவையான இசையைக் கொடுக்க, இது ரசிர்களுக்கு செம மியூசிக் ட்ரீட்டாக அமைந்தது. மேலும் இந்த மியூசிக் பலரது ரிங் டோனாக இன்றுவரை உள்ளது.

ட்ரெண்ட்: படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆவதால் ரசிகர்கள் இணையத்தில் , " #1YearOfMegaBlockbusterLeo, #1YearOfIndustryHitLEO , #1YearOfLeo போன்ற ஹேஷ் டேக்குகளை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல், படக்குழு இன்று The Chronicles of Leo என்ற வீடியோவை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள், The Chronicles of Leo என்ற ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

லியோ 2: இப்படியான நிலையில் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது எக்ஸ் பக்கத்தில், " எத்தனையோ படிப்பினைகள், நிறைய அனுபவங்கள், பல நினைவுகள், பல உற்சாகமான தருணங்கள். லியோ என் மனதிற்கு நெருக்கமான படம். லவ் யூ சோ மச் விஜய் சார். இந்த வியர்வை மற்றும் ரத்தத்தை செலவழித்த படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இவ்வாறு ட்வீட் போட்ட நிலையில், இன்று காலையில் இருந்தே Leo 2 என்ற ஹேஷ்டேக்கினை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்ற்னர். ஆனால் விஜய் ஏற்கனவே சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால், லியோ 2 படம் சாத்தியமாகுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.



Click it and Unblock the Notifications











