லோகேஷ் கனகராஜ் கலக்கிட்டாரு.. கூலி படத்தில் வரும் ரெட்ரோ பாடல் என்ன தெரியுமா?.. தியேட்டரில் திருவிழா

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கூலி இன்று வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் காலை ஒன்பது மணிக்குதான் ஃபர்ஸ்ட் ஷோ. இருப்பினும் மற்ற இடங்களில் படம் ரிலீஸாகிவிட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சூப்பரான ஒரு ரெட்ரோ பாடலை படத்தில் ப்ளேஸ் செய்திருக்கிறார் லோகி.

லோகேஷ் கனகராஜுக்கென்று ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது. கூலி படத்தை இயக்குவதற்கு முன்பு அவர் இயக்கியிருந்த ஐந்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும் வணிக ரீதியாக சக்கைப்போடு போட்டுவிட்டது என்கிறது பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம். எனவே ரஜினியுடன் அவர் இணைந்திருக்கும் கூலி படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு.

இன்று ரிலீஸ்: படமானது அறிவிக்கப்பட்டபடி இன்று ரிலீஸாகியிருக்கிறது. வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் ரசிகர்கள் படத்தை பார்க்க தொடங்கிவிட்டார்கள். இதுவரை படம் பார்த்தவர்களில் பெரும்பாலானோர் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகிறார்கள். முக்கியமாக ரஜினிகாந்த்தின் எனர்ஜியை பாராட்டும் அவர்கள்; இவருக்கு உண்மையில் 74 வயது ஆகிறதா என ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

Lokesh Kanagaraj used the song Vaa Vaa Pakkam Vaa in the movie Coolie
Photo Credit:

லோகியின் ஸ்பெஷல்: லோகேஷ் கனகராஜின் படங்கள் என்றாலே அதில் ஒரு ரெட்ரோ பாடல் இடம்பெற்றுவிடுவது வழக்கம். கைதியில் தொடங்கிய அந்த கலாசாரம் அவர் கடைசியாக இயக்கிய லியோ படம்வரை தொடர்ந்தது. அதிலும் குறிப்பாக லோகேஷை பார்த்து மற்ற இயக்குநர்களும் அதிகளவு தங்களது படங்களில் ரெட்ரோ பாடல்களை வைத்துவிடுகிறார்கள். அது வரவேற்பு, எதிர்ப்பு என இரண்டையும் பெற்றுவருகின்றன.

என்ன பாடல்?: அதேசமயம் லோகேஷ் கனகராஜ்தான் ஒரு ரெட்ரோ பாடலை எந்த இடத்தில் சரியாக ப்ளேஸ் செய்ய வேண்டும் என்பதில் கில்லி என்பது பலரது எண்ணவோட்டம். கண்டிப்பாக கூலி படத்திலும் ரெட்ரோ பாடல் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்புடன் தியேட்டர்களுக்கு சென்றார்கள் ரசிகர்கள். அவர்கள் நினைத்தபடியே சரியான இடத்தில் ப்ளேஸ் செய்திருக்கிறார். அந்தப் பாடல் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான தங்கமகன் படத்தில் இடம்பெற்ற வா வா பக்கம் வா பாடல் ஆகும்.

தியேட்டர்களில் திருவிழா: படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானபோதும் பேக்ரவுண்டில் இந்தப் பாடலின் இசையை ஒலிக்கவிட்டிருந்தார்கள். அந்த சமயத்தில் இளையராஜாவும் கூலி படக்குழுவுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பினார். இப்போது படத்திலும் அந்தப் பாடல் பயன்படுத்திருப்பதால்; கண்டிப்பாக ராஜாவிடம் அனுமதி வாங்கியிருப்பார்கள் என்றே நம்பப்படுகிறது. எது எப்படியோ, தியேட்டரில் அந்த ரெட்ரோ பாடல் ஒலிக்கும்போது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X