twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    10 கோடி ரூபாய் செலவில்.. விக்ரம் படத்திற்காக இப்படியொரு மேஜிக்கை நிகழ்த்திருக்காரா லோகேஷ் கனகராஜ்?

    |

    சென்னை: கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தில் 80களில் கமல் எப்படி இருந்தாரோ அப்படியே கொண்டு வரும் முயற்சியை செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

    ரயில்களில் விக்ரம் படத்தின் போஸ்டர்களை ஒட்டி விளம்பர பணிகளை இப்போதே தொடங்கி விட்டனர்.

    இந்த படத்திற்காக கடும் உழைப்பை போட்டு வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், சமீபத்தில் கசிந்த ஒரு புகைப்படத்தின் மூலம் அவர் செய்துள்ள சூப்பர் மேஜிக் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மேடையில் கதறி அழுத பாக்கியலட்சுமி சீரியல் நடிகை… கட்டி அணைத்து ஆறுதல் சொன்ன சக நடிகை !மேடையில் கதறி அழுத பாக்கியலட்சுமி சீரியல் நடிகை… கட்டி அணைத்து ஆறுதல் சொன்ன சக நடிகை !

    விக்ரம்

    விக்ரம்

    இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1986ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படம் விக்ரம். பிரபல எழுத்தாளர் சுஜாதா அந்த படத்திற்கு கதை எழுதியிருந்தார். இந்நிலையில், 2022ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் அதே டைட்டிலில் கமல் நடித்து வருகிறார். வரும் ஜூன் 3ம் தேதி அந்த படம் திரைக்கு வருகிறது.

    மூவரும் கைதிகளா

    மூவரும் கைதிகளா

    இந்நிலையில், விக்ரம் படத்தின் கதை இதுதான் என ஒரு தகவல் பரவி வருகிறது. விஜய்சேதுபதி பயங்கர கைதி என்றும் அவரை காப்பாற்ற பகத் ஃபாசில் கைதியாக உள்ளே வர, இந்த எஸ்கேப் சம்பவத்தை தவிர்க்க ரிட்டயர்ட் போலீஸ் ஆன கமலும் கைதியாக ஜெயிலுக்குள் வருவதும், அங்கே நடக்கும் சம்பவம் தான் கதை என்கின்றனர்.

    இளமையான கமல்

    இளமையான கமல்

    மேலும், இந்த படத்தில் De Ageing எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 80களில் கமல் எப்படி இருந்தாரோ அதே கமலை மீண்டும் ஃபிளாஷ்பேக் போர்ஷனுக்காக ரீ-க்ரியேட் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அதனை உறுதி செய்யும் விதமாக தொழில்நுட்பக் குழுவினர் எடுத்துக் கொண்ட போட்டோவுக்கு அருகே வைக்கப்பட்டு இருந்த லேப்டாப்பில் இளமையான கமல் புகைப்படம் இருப்பதை நெட்டிசன்கள் ஜூம் செய்து நோட் பண்ணி உள்ளனர்.

    10 கோடி செலவு

    10 கோடி செலவு

    சுமார் 10 கோடி ரூபாய் செலவில் டீ ஏஜிங் தொழில் நுட்பத்தின் மூலமாக இளமையான கமல்ஹாசனை மீண்டும் திரையில் காட்டி மேஜிக் செய்யப் போகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்கிற தகவல் காட்டுத் தீ போல பரவி வருகிறது. மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    வெள்ளை ரஜினி

    வெள்ளை ரஜினி

    ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி படத்தில் ஒரு கூடை சன் லைட் பாடலுக்காக ரஜினிகாந்தை அப்படியே வெள்ளைக்காரனாகவே மாற்றிக் காட்டியிருப்பார்கள். ஆதவன் படத்தில் இளம் வயது சிறுவனுக்கும் சூர்யாவின் முகத்தோற்றத்தையே வைத்திருப்பார்கள். இந்நிலையில், விக்ரம் படத்தில் டீ ஏஜிங் மேஜிக் எப்படி வொர்க் ஆகப் போகிறது என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    அந்த விக்ரம் லிங்க்

    அந்த விக்ரம் லிங்க்

    ஓய்வுப்பெற்ற போலீஸ் அதிகாரி விக்ரமாக இந்த படத்தில் கமல்ஹாசனை காட்டப் போகும் நிலையில், அவரது இளமைக் கால கதையாக அந்த விக்ரம் படத்தின் கதை லிங்க் இந்த படத்தில் இடம்பெறவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜூன் 3ம் தேதி திரையில் நிச்சயம் பெரிய சம்பவத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தளபதி 67

    தளபதி 67

    மாஸ்டர் படம் மூலம் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் உடன் இணைந்து தளபதி 67 படத்தை பண்ணப் போகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி வருகின்றன. தளபதி 67 படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் என்றும் கூறுகின்றனர். தளபதி 66 படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Lokesh Kanagaraj using DeAging concept to show Young Kamal Haasan in Vikram buzz circulates with Movie Crew’s official photo.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X