மாஸ்டர் இப்போ எப்படி இருக்கு...ரசிகர்களுடன் படம் பாத்த லோகேஷ் கனகராஜ்

சென்னை: விஜய் - விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளத்தில் ஹிட்டாகி உள்ளது. இப்படி ரிலீசாகி 30 நாட்கள் ஆன போதிலும் ஹிட் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

30 நாட்கள் ஆன பிறகும் ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கு என்பதை தெரிந்து கொள்ள படத்தின் டைரக்டரான லோகேஷ் கனகராஜ் சென்னையில் தியேட்டருக்கு நேரடியாக சென்றுள்ளார். ராக்கி சினிமாசில் ரசிகர்களுடன் லோகேஷ் கனகராஜ் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lokesh Kanagaraj visits theatre as Master completes 30 days of release

அவர் ரசிகர்களுடன் பேசுகையில், படம் ரிலீஸ் ஆகி 30 நாட்கள் ஆன பிறகும் நீங்கள் தியேட்டருக்கு வந்திருப்பதை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது. படத்தை பார்த்து, வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி. கவலைப்படாதீர்கள். நான் உங்களுடன் அமர்ந்து முழு படத்தையும் பார்ப்பேன் என்றார்.

ரசிகர்கள் சிலருக்கு அவர் கைகுலுக்கி, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை ராக்கி சினிமாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பொங்கல் வெளியீடாக ஜனவரி 13 ம் தேதி மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. கொரோனாவால் தள்ளிப் போன மாஸ்டர் படத்தின் ரிலீஸ், தியேட்டரில் 50 சதவீதம் ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையிலும் துணிந்து தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. இருந்தும் ரசிகர்களிடம் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X