டேய் மச்சான் என்னடா ஆச்சு.. ஸ்ரீயின் பரிதாப நிலை.. கலங்கிப்போன லோகேஷ் கனகராஜ்!
சென்னை: வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் ஸ்ரீ ராம் நாராயணன். முதல் படமே அவருக்கு நல்ல பெரை பெற்றுத் தந்தது. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு இவருக்கு பெரிய அளவில் படம் வாய்ப்பு அமையவில்லை என்றாலும், ஆண்டுக்கு ஒருபடத்தில் நடித்து வந்தார். கடைசியாக இவர் இறுகப்பற்று படத்தில் நடித்தார். அந்த படத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், தற்போது ஸ்ரீ உடல் எடை குறைந்து அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். இதைப்பார்த்த பலர் ஸ்ரீக்கு என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் பிரபலமான நடிகர் ஸ்ரீ. பாலாஜி சக்திவேல் இயக்கி வழக்கு எண் 18/9 படத்தில் வேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஸ்ரீக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது அதைத் தொடர்ந்து, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்டி, வில் அம்பு
மாநகரம், இறுகப்பற்று போன்ற படத்தில் நடித்தார். ஸ்ரீ நடித்த படத்தில் சோன் பப்டி படத்தை தவிர மற்ற படங்கள் எல்லாமே வெற்றிப்படங்கள் தான். மாநகரம் படத்திற்கு பிறகு படவாய்ப்பு இல்லாததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், போட்டி தொடங்கிய நான்கு நாட்களிலேயே, எனக்கு இதெல்லாம் செட்டாகாது, என்னால் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டார்.

நடிகர் ஸ்ரீ: அதன் பிறகு இறுகப்பற்று படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கடந்த ஆண்டு வெளியானது, அந்த படத்தின் வெற்றி பற்றிக்கூட அந்த படத்தில் நடித்த நடிகர்கள் பேட்டி கொடுத்து இருந்தார்கள். அப்போது கூட ஸ்ரீ பேட்டி கொடுக்கவில்லை. ஸ்ரீ என்ன ஆனார்... எங்கே போனார் என்று யாருக்கும் தெரியாமல் இருந்த, நிலையில் தான் ஸ்ரீ எலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாத அளவில் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. இதைப்பார்த்த, இணையவாசிகள் பலரும் அதிர்ச்சி அடைந்து. ஸ்ரீக்கு என்ன ஆச்சு என்று கேட்டு வருகின்றனர். ஆனால், ஸ்ரீ தலைக்கு கலரிங் அடித்துக்கொண்டும், நிர்வாணமாகவும் சில வீடியோவில் இருக்கிறார். இதைப்பார்க்கும் போது, அவர் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது போல தெரிகிறது. இதுகுறித்து பேசிய பத்திரிக்கையாளர் சேகுவேரா,ஸ்ரீ தற்போதைய நிலைமையை பார்க்கும் போது, பல ஆண்டுகளாக தனிமையில் இருப்பது போல இருக்கிறது. அவர் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனால், அவருக்கு உரிய கவுன்சிலிங் கொடுத்தால், நிச்சயம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.

டேய் மச்சான் என்னடா ஆச்சு: நடிகர் ஸ்ரீ மோசமான நிலையில் இருக்கும் இந்த செய்தி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, அது லோகேஷ் கனகராஜின் காதுக்கு சென்றுள்ளது. இதைக் கேள்விப்பட்ட லோகேஷ், தனது உதவியாளர்களிடம் மச்சானுக்கு என்னடா ஆச்சு.. என்று கேட்டு இருக்கிறார். மேலும், தற்போது ஸ்ரீ எங்கே இருக்கிறார் என்பதை விரைவில் கண்டுபிடிக்க என்று சொல்லி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நிச்சயம், ஸ்ரீக்கு லோகேஷ் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வார் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











