Lokesh Kanagaraj - கமலுக்காக உண்மையில் சண்டை செய்த லோகேஷ் கனகராஜ்.. ஆதாரம் இதோ

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) கமல் ஹாசனுக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிளேட்டை தூக்கி எறிந்து சண்டை செய்திருக்கிறார் என மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் இப்போதைக்கு லோகேஷ் கனகராஜ்தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அவர் இயக்கிய நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. அவர் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

Lokesh Kanagaraj who really fought for Kamalhaasan Says Madonne ashwin

அடுத்த படம்: லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி 2 படத்தை இயக்குவார் என முதலில் கூறப்பட்டது. அது கன்ஃபார்ம்தான் என்றாலும் அதற்கு முன்னதாக ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறார். இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய அடையாளமாக இருக்க வேண்டும் என ரஜினிகாந்த் விரும்புவதாகவும் அதற்காக லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை முடித்துவிட்டு ரஜினி படத்துக்காக முழு மூச்சாக இறங்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஸ்க்ரீன் ப்ளேவில் மேஜிக்: அவருக்கு ஏற்பட்டிருக்கும் டிமாண்டிற்கு காரணம் அவர் உருவாக்கி வைத்திருக்கும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ்தான். தமிழ் சினிமாவுக்கு புதிதான அந்த விஷயத்தை விக்ரம் படத்தில் ரொம்பவே இயல்பாக சாதித்துக்காட்டிவிட்டார். இதன் காரணமாக லியோ படமும் எல்சியூவுக்குள் வருமா என்ற கேள்வி பலரிடம் எழுந்திருக்கிறது. அந்த எல்சியூவின் தாக்கத்தில்தான் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பேகூட லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கமல் ஹாசன் ரசிகன்: லோகேஷ் கமல் ஹாசனின் தீவிரமான ரசிகர். பொள்ளாச்சியில் நடந்த கமல் பட ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தது, ஆழ்வார் பேட்டையில் இருக்கும் கமலின் வீட்டை பார்த்தபடியே சென்றது என இருந்த லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கி மெகா ஹிட்டாகவும் ஆக்கிவிட்டார். மேடைக்கு மேடை தான் எவ்வளவு பெரிய கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்பதை அவர் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பவர். அண்மையில்கூட ஒரு மேடையில் கமல் ஹாசனுக்காக சட்டையை கிழிச்சிட்டு சண்டைக்கு போவேன் என கூறியிருந்தார்.

உண்மையில் சண்டை: இந்நிலையில் கமல் ஹாசனுக்காக உண்மையில் லோகேஷ் கனகராஜ் சண்டை செய்திருந்ததாக மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "லோகேஷ் வெறித்தனமான கமல் சார் ரசிகன் அவர பத்தி ஏதாவது பேசிட்டா போதும் அடிதடி சண்டையெல்லாம் போட்டு பிளேட்லாம் பறக்கும் நாங்க புடிச்சி இழுத்துட்டு வருவோம், கமல் சார் பத்தி தப்பா பேசுனா அவனுக்கு பொருக்காது எப்படிடா அவன் பேசலாம்னு சொல்லுவான்" என்றார்.

நண்பர்கள்: லோகேஷும், மடோன் அஷ்வினும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிலிருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பது கவனிக்கத்தக்கது. மடோன் அஷ்வின் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் படத்தை இயக்கியிருக்கிறார். படமானது நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X