ஹீரோவான லோகேஷ் கனகராஜ்.. கமல் ஹாசன் வெளியிட்ட சூப்பர் அப்டேட்.. இது லிஸ்ட்லயே இல்லையே

சென்னை: கோலிவுட்டின் டாப் இயக்குநர்களில் ஒருவராக இப்போது வலம் வந்துகொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் அவர் மீது ரசிகர்களுக்கு இருக்கும் கிரேஸ் குறையவில்லை. அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். சூழல் இப்படி இருக்க அவர் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார். அதுகுறித்த அப்டேட்டை கமல் ஹாசன் வெளியிட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் இப்போதைக்கு லோகேஷ் கனகராஜ்தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அவர் இயக்கிய முதல் நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. அவரது இயக்கத்தில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான லியோ விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தினாலும் பொதுவான ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியது. எனவே வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு லியோ திரைப்படம் முதல் சறுக்கலாகவே கருதப்படுகிறது.

Lokesh Kanagaraj Will Act hero in Shruthi Haasan Inimel Album Song

தலைவர் 171: லியோ திரைப்படத்தை முடித்திருக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மார்ச் அல்லது ஏப்ரலில் ஷூட்டிங் ஆரம்பமாகும் என லோகேஷ் தெரிவித்திருக்கிறார். லியோ படத்தில் சந்தித்த விமர்சனங்களை கண்டிப்பாக தலைவர் 171ல் சரி செய்வார் என்று நம்பப்படுகிறது. ரஜினி படத்துக்கான பணிகளையும் தொடங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

எல்சியூ: லோகேஷ் கனகராஜின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று அவரது மேக்கிங்கும் திரைக்கதையும். தான் திறமை வாய்ந்த கலைஞர் என்பதை தன்னுடைய முதல் படமான மாநகரத்திலேயே தன்னுடைய மேக்கிங் மூலம் நிரூபித்திருப்பார். அடுத்ததாக கமல் ஹாசனை வைத்து இயக்கியிருந்த விக்ரம் படத்தில் எல்சியூவை உருவாக்கி திரைக்கதையில் மேஜிக் நிகழ்த்தியிருப்பார்.

ஒர்க் அவுட் ஆகாத எல்சியூ: லோகேஷ் கனகராஜின் பலமாக பார்க்கப்பட்ட எல்சியூவே லியோவில் அவருக்கு சூட்டை கொடுத்திருக்கிறது. கைதி பட கான்ஸ்டபிள் நெப்போலியன் வந்ததோ இல்லை படத்தின் க்ளைமேக்ஸில் விக்ரம் கமல் ஹாசன் பேசுவது போன்ற காட்சியோ ரசிகர்களை ஈர்க்கவில்லை. குறிப்பாக லியோ திரைப்படத்தை எல்சியூவுக்குள் கொண்டுவந்தே ஆக வேண்டும் என்ற முடிவில் அவர் இருந்தாரோ என்ற சந்தேகத்தையும் கிளப்பினர் ரசிகர்கள்.

நடிகர் லோகேஷ் கனகராஜ்: இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்திவந்த லோகேஷ் கனகராஜ் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன்படி ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றியிருந்த அவர், அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அதில் லோகேஷ் கனகராஜ் நடிப்பதற்கு வாய்ப்புகள் கம்மி என்று தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் ஹீரோவாகிறார்.

எதில் ஹீரோ: ஆனால் படத்தில் அல்ல ஒரு ஆல்பத்தில். கமல் ஹாசனின் மகளும், பாடகியும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் இனிமேல் என்ற சுயாதீன பாடலை உருவாக்கியிருக்கிறார். அவரே இசையமைத்து பாடியிருக்கும் அந்தப் பாடலை கமல் ஹாசன் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலில்தான் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக களமிறங்குகிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவில் கமல் ஹாசன், லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் ஆகிய மூன்று பேரும் தோன்றியிருக்கிறார்கள். இப்பாடலை கமல் ஹாசன் எழுதுவதோடு மட்டுமின்றி தயாரிக்கவும் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X