கூலி படத்தில் லோகேஷ் கனகராஜும் நடிக்கிறாரா?. ஒருவேளை இருக்குமோ.. சந்தேகம் கிளப்பும் ரசிகர்கள்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இப்போது ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ரஜினியுடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வழக்கம்போல் அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறது. விறுவிறுப்பாக நடந்துவந்த இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் புதிய புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக அந்தப் படத்தின் சில காட்சிகள் கொண்டாடப்பட்டாலும்; ஜெய் பீம் அளவுக்கு கொண்டாடப்படவில்லை. அதற்கு, வேட்டையன் ஞானவேல் படமாகவும் இல்லை; ரஜினிகாந்த் படமாகவும் இல்லை. இருந்தாலும் இந்த மாதிரியான ஒரு கதையில் நடித்ததற்கு ரஜினியை கொண்டாடலாம் என்று ரசிகர்கள் கூறினார்கள்.

Lokesh Kanagaraj Will Act in Rajinikanth s Coolie Movie

லோகேஷுடன்இணைந்த ரஜினிகாந்த்: வேட்டையன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். இதில் அவர் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். ஏற்கனவே தளபதி படத்தில் அவர் தேவா என்ற கேரக்டரை ஏற்றிருந்ததும்; அந்தப் படம் மெகா ஹிட்டாகி; கல்ட் க்ளாசிக் படமாக இன்றும் கொண்டாடப்படுவதும் குறிப்பிடத்தக்கது. எனவே கூலி படமும் அந்த மாதிரி அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

லோகேஷுக்கும் இந்தப் படம் முக்கியம்: ரஜினிகாந்த் மட்டுமின்றி லோகேஷ் கனகராஜுக்கும் இந்தப் படம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை அவர் இயக்கிய படங்களில் லியோ தவிர்த்து அத்தனை படங்களும் ஹிட். ஆனால் லியோவோ தோல்வி என்பதை தாண்டி கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. முக்கியமாக பிளாஷ்பேக் போர்ஷனை வைத்து லோகேஷ் கனகராஜை செய்துவிட்டார்கள். எனவே இந்தப் படத்தின் மூலம் தான் சந்தித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறார்.

Lokesh Kanagaraj Will Act in Rajinikanth s Coolie Movie

நட்சத்திர பட்டாளம்: எனவே இந்தப் படத்தை பார்த்து பார்த்து அவர் செதுக்கியிருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி இதிலும் பெரும் நட்சத்திர பட்டாளத்தை இறக்கியிருக்கிறார். அதன்படி நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன். ஆமிர் கான், சத்யராஜ் என பலர் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் பற்றிய போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

ஷூட்டிங்கை முடித்த ரஜினிகாந்த்: கூலி படத்தில் ரஜினிகாந்த் மும்முரமாக நடித்துவந்தார். சமீபத்தில்தான் அவரது போர்ஷன் தொடர்பான ஷூட்டிங் முடிந்தது. அதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின. மேலும் படத்தின் ஓடிடி உரிமம் பல கோடி ரூபாய்க்கு விலை போயிருப்பதாகவும்; கண்டிப்பாக இந்தப் படம் வியாபாரத்தில் புதிய சாதனை படைக்கும்; அதுமட்டுமின்றி இந்திய அளவில் வசூல் ரீதியாக உச்சக்கட்ட சாதனையை படைக்கப்போவது உறுதி என்று ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

Take a Poll

லோகேஷும் நடிக்கிறாரா?: இந்நிலையில் கூலி படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துவிட்டதாக படத்தை தயாரித்திருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்திருக்கிறது. அதில் ஒரு புகைப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் படக்குழுவுடன் இருப்பது போன்றும், இன்னொரு புகைப்படத்தில் ரஜினியும், லோகேஷும் ஒரே நிற உடையில் இருக்கிறார்கள். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை லோகேஷும் இந்தப் படத்தில் நடிக்கிறாரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X