இயக்கம் மட்டுமில்லை நடிப்பிலும் கலக்க வரும் லோகேஷ் கனகராஜ்?

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் ஒன்றில் கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கினாலே படம் ஹிட் என்ற நிலை கோலிவுட்டில் இப்போது உருவாகியிருக்கிறது. இதனால் அவருக்கென்று ரசிகர் பட்டாளம் உருவாகி அவரது படத்தை எதிர்பார்த்திருக்கிறது.

தொடர் ஹிட்டுகள் கொடுத்த லோகேஷ்

தொடர் ஹிட்டுகள் கொடுத்த லோகேஷ்

ஒரு இயக்குநர் தொடர்ச்சியாக இரண்டு ஹிட்டுகள் கொடுப்பதே அசாத்தியமாக இருக்கும் சூழலில் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ச்சியாக நான்கு ஹிட்டுகளை கொடுத்திருக்கிறார். அதிலும் விக்ரம் படம் கமல் ஹாசனை வைத்து இயக்கி 500 கோடி ரூபாய் வசூலை எடுத்தார். அந்தப் படம் கமல் ஹாசனுக்கு மட்டும் கம்பேக்காக இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் கம்பேக்காக இருந்தது. ஏனெனில் விக்ரம் படம் ஹிட்டாவதற்கு முன்பு வேற்று மொழி படங்களே தமிழ்நாட்டில் சில காலம் ஹிட்டாகிக்கொண்டிருந்தன.

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ்

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ்

ஹாலிவுட்டில் இயக்குநர்கள் சினிமாட்டிக் யுனிவெர்ஸை உருவாக்குவார்கள். அது இந்திய சினிமாவில் சாத்தியமாகுமா என்ற ஏக்கம் பல வருடங்கள் ரசிகர்களிடம் இருந்தது. அந்த ஏக்கத்தை லோகேஷ் கனகராஜ் தனது ஒரே படத்தில் போக்கிவிட்டார். விக்ரம் படத்தில் அவர் கைதி கதாபாத்திரங்களையும், கமல் ஹாசனின் பழைய விக்ரம் பட லைனையும் இணைத்து லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸை உருவாக்கியிருக்கிறார்.

லியோவிலும் எல்சியூ

லியோவிலும் எல்சியூ


அவர் தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கியிருக்கிறார். மிக சமீபத்தில்தான் காஷ்மீரில் இதன் ஷூட்டிங் முடிந்தது. இந்தப் படமும் எல்சியூவில் வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. மேலும் விக்ரம் படத்தில் அமர் கதாபாத்திரத்தில் நடித்த ஃபஹத் பாசில், ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா உள்ளிட்டோரும் லியோவில் நடிக்கலாம் என கூறப்படுவதால் இந்தப் படம் நிச்சயம் எல்சியூவில் வரும் என நம்பிக்கை வைத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ்?

கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ்?

லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் க்ளைமேக்ஸில் சில நிமிட காட்சிகளில் தோன்றி நடித்திருப்பார். இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாகவும் இதற்கான ஷூட்டிங்கில் அவர் விரைவில் கலந்துகொள்ளவிருக்கிறார் எனவும் கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளராகவும் லோகேஷ் கனகராஜ்

தயாரிப்பாளராகவும் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கம் மட்டுமின்றி பட தயாரிப்பிலும் ஈடுபடவிருக்கிறார் என கூறப்படுகிறது. தன்னுடைய படங்களில் வசனகர்த்தாவாகவும், திரைக்கதை பங்களிப்பிலும் தொடர்ந்து பணியாற்றிவரும் ரத்னகுமார் இயக்கத்தில் லோகேஷ் முதல் படத்தை தயாரிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X