லோகேஷ் கனகராஜ் ஒரு முடிவோடுதான் இருக்காரோ?.. அடுத்தது அவர் செய்யப்போவது இதுவா?.. ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் சமீபகாலமாக நடிப்பிலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அவர்; இப்போது ஸ்ருதிஹாசன் இசையமைத்து கமல் ஹாசன் எழுதியிருக்கும் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் ஹீரோவாக தோன்றியிருந்தார். இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் அவர் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்திலேயே தன்னை ஒரு நல்ல இயக்குநர் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். அந்தப் படத்தை பார்த்த பலரும் கண்டிப்பாக இந்த இயக்குநர் பெரிய ஆளாக வருவார் என்று கணிக்க ஆரம்பித்தனர். அந்த கணிப்பை சரியாக்கும் விதமாக அமைந்தது அவரது இரண்டாவது படமான கைதி. கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆகி ஒரே இரவில் லோகேஷின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றது.

Lokesh Kanagaraj Puranaanooru Sudha Kongara

முன்னணி ஹீரோக்களுடன்: இதனையடுத்து விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர் என்ற பெயரை பெற்றார் லோகேஷ். தொடர்ந்து தனது ரோல்மாடலான கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். விமர்சன ரீதியாக ஒரு தரப்பிடம் அந்தப் படம் அடி வாங்கினாலும் பெரும்பாலானோரிடத்தில் படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. 400 கோடி ரூபாய்வரை வசூலித்து இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநராக லோகேஷை மாற்றியது.

முதல் சறுக்கல்: இப்படி வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்த லோகேஷுக்கு முதல் சறுக்கலாக லியோ திரைப்படம் வெளியானது. கடந்த வருடம் வெளியான அந்தப் படம் தோல்வியையே சந்தித்தது. பிளாஷ்பேக் விவகாரம், மனிதர்களை பலி கொடுக்கும் காட்சி விவகாரம், திரைக்கதை என பல விஷயங்கள் லோகேஷுக்கு எதிராக திரும்பின. முக்கியமாக பிளாஷ்பேக் விஷயம் லோகேஷை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. வசூல் ரீதியாக படம் ஓகேதான் என்றாலும் விமர்சன ரீதியாக படுத்துவிட்டது.

எல்சியூ: முக்கியமாக லோகேஷ் கனகராஜின் பலங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது எல்சியூ. லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்ற கான்செப்ட் விக்ரம் படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ஆனால் லியோ திரைப்படத்தில் எடுபடவில்லை. மேலும் வேண்டுமென்றே இதில் எல்சியூவை லோகேஷ் திணித்திருக்கிறார் என்ற விமர்சனம்தான் மிஞ்சியது. இப்படி லியோவில் அவர் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தாலும் அவருக்கான டிமாண்ட் குறையவில்லை. அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கிவருகிறார்.

நடிகர் லோகேஷ்: லோகேஷ் கனகராஜ் இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்துகிறார். ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றிய அவர்; இப்போது ஸ்ருதிஹாசன் இசையமைத்து, கமல் தயாரித்து எழுதியிருக்கும் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் ஹீரோவாக நடித்திருந்தார். அதில் அவரும், ஸ்ருதிஹாசனும் ரொமான்ஸ் செய்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

புறநானூறில் லோகேஷ் கனகராஜ்?: இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி சுதா கொங்கரா இயக்கவிருக்கும் புறநானூறு படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சூர்யாவை வைத்து அந்தப் படத்தை சுதா இயக்குவதாக இருக்கிறார். ஆனால் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போய்க்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்தப் படத்தில் கமிட்டான துல்கர் சல்மான் இதிலிருந்து விலகிவிட்டார். எனவே துல்கர் சல்மான் ரோலில் லோகேஷை நடிக்க வைக்க சுதா கொங்கரா திட்டமிட்டிருப்பதாக பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X