LEO பட்ஜெட்டில் லோகேஷ் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா... அடுத்த ஆஃபர் லைஃப் டைம் செட்டில்மெண்ட்?
சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் மல்டி ஸ்டார்ஸ் திரைப்படமாக உருவாகும் லியோ, ஆயுத பூஜை விடுமுறையில் வெளியாகிறது.
இந்நிலையில், இந்தப் படத்திற்காக லோகேஷ் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
அதேபோல், அடுத்தடுத்து லோகேஷ் இயக்கவுள்ள படங்களுக்காக கொடுக்கப்பட்ட ஆஃபர்கள் கோலிவுட்டையே தலைசுற்ற வைத்துள்ளது.

லியோவில் லோகேஷ் சம்பளம்
விஜய்யின் 67வது படமாக உருவாகி வரும் லியோ ஷூட்டிங் காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படமும் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். ரசிகர்களுக்கே இப்படியென்றால் தயாரிப்பு நிறுவனம் பற்றி கேட்கவா வேண்டும். அதனால் தான் லோகேஷ் கனகராஜ்ஜுக்கு சம்பளமாக பல கோடிகளை கொட்டிக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம்.

அடுத்தடுத்து வரும் மெகா ஆஃபர்ஸ்
மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ், அடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கினார். அவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படங்களும் வசூலில் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்றன. முக்கியமாக கடந்தாண்டு ரிலீஸான விக்ரம் திரைப்படம், கோலிவுட் இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்தது. இதனால் லோகேஷை புக் செய்ய ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும் ரெடியாக உள்ளனர். லியோ படத்தை முடித்துவிட்டு கைதி இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார் லோகேஷ். இதனைத் தொடர்ந்து ரஜினி, சல்மான் கான் ஆகியோர் லோகேஷுக்கு ஆஃபர் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆச்சரியத்தில் கோலிவுட்
ஏற்கனவே ரஜினி தனது கடைசி படத்திற்காக லோகேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் லோகேஷ் கனகராஜ்ஜிடம் கதை இருந்தால் கேட்டுள்ளாராம். இதில் ரஜினி படத்தை இயக்க 35 கோடியும், சல்மான் கான் படத்தை இயக்க ரூ 50 கோடி வரையிலும் லோகேஷுக்கு சம்பளம் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநராக ஷங்கர் தான் காணப்படுகிறார். இப்போது அவரையும் தூக்கி சாப்பிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

லைஃப் டைம் செட்டில்மென்ட்
விக்ரம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சந்தீப் கிஷன், லோகேஷின் முதல் படமான மாநகரம் பட்ஜெட்டில், விக்ரம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறுவதாக பேசியிருந்தார். லோகேஷின் கேரியரும் அப்படியே ஒவ்வொரு படத்திலும் வேற லெவலில் ஹைப் கூடி வருகிறது. லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த லோகேஷ், ஐந்தே படங்களில் இப்போது கோடிகளில் பயணித்துக் கொண்டிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் பேசியிருந்த லோகேஷ், தனது மனைவி வேலைக்கு சென்று சம்பாதித்ததால் தான், நான் இன்று இயக்குநராக நிற்கிறேன் எனக் கூறியிருந்தார். அதற்கான ஒர்த்தான சம்பவத்தை லோகேஷ் செய்துவிட்டார் என்றே தெரிகிறது.

வேகமெடுக்கும் லியோ ஷூட்டிங்
காஷ்மீரில் நடைபெறும் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், ஜார்ஜ் மரியான், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், டான்ஸர் வசந்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து லெஜண்ட் அண்ணாச்சியும் ஒரு கேரக்டரில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து இன்னும் அபிஸியல் அப்டேட் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











