ரஜினியின் கடைசிப் படம் லோகேஷுடன் தான்... அபிஸியல் அப்டேட் வெளியாகாமல் இருக்க இதுதான் காரணம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து லால் சலாம், தலைவர் 170 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், ரஜினி தனது கடைசிப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வேண்டும் என விரும்புவதாக செய்திகள் வெளியாகின.

அதன்படி, ரஜினி - லோகேஷ் கூட்டணி இணைவது உறுதியாகிவிட்டதாகவும், இன்னும் அப்டேட் வராமல் இருக்க விஜய் தான் காரணம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 ரஜினியின் கடைசி திரைப்படம்

ரஜினியின் கடைசி திரைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் தசெ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், ரஜினி தனது கடைசிப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வேண்டும் என விரும்புவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

 ரஜினியுடன் இணையும் லோகேஷ்

ரஜினியுடன் இணையும் லோகேஷ்

மாஸ்டர் படத்தை முடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை தான் லோகேஷ் இயக்கவுள்ளதாக அப்போது செய்திகள் வெளியாகின. மேலும், இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அப்போது ரஜினியால் இந்தப் படத்தில் கமிட் ஆக முடியாமல் போகவே, கமல் - லோகேஷ் கூட்டணியில் விக்ரம் உருவானது. இப்போது மீண்டும் ரஜினி கேட்டுக் கொண்டதால் ஏற்கனவே எழுதிய ஸ்கிரிப்ட்டை மீண்டும் ரெடி செய்து வருகிறாராம் லோகேஷ்.

 விஜய் தான் இதற்கு காரணம்

விஜய் தான் இதற்கு காரணம்

ரஜினி - லோகேஷ் இணையும் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்போதே இதுகுறித்து அபிஸியல் அப்டேட் வெளியாக வேண்டாம் என லோகேஷிடம் விஜய் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் லியோ அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. மேலும், படப்பிடிப்பும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நேரம் ரஜினி - லோகேஷ் இணையும் படத்தின் அப்டேட் வெளியானால், லியோ மீதான எதிர்பார்ப்பு குறைந்துவிடும் என விஜய் பயப்படுகிறாராம்.

 மரண மாஸ் சம்பவம் லோடிங்

மரண மாஸ் சம்பவம் லோடிங்

அதனால் தான் லோகேஷ் தரப்பிலும் இதுகுறித்து எந்த செய்தியையும் கசிய விடவில்லையாம். முன்னதாக விஜய்யின் வாரிசு வெளியாகும் வரை லியோ படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தார் லோகேஷ். தற்போது அதே பாலிசியை ரஜினியுடன் இணையும் படத்திற்கும் கடைபிடித்து வருகிறார் லோகேஷ். லியோவை முடித்துவிட்டு உடனடியாக கார்த்தியின் கைதி 2 படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதன்பின்னரே ரஜினியின் படத்தை லோகேஷ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X