லோகேஷ் கனகராஜ் என்னை கொன்னே புடுவாரு.. மிரண்ட மாளவிகா.. எதுக்குன்னு பாருங்க!
சென்னை: ரசிகர் கேட்ட கேள்விக்கு அதை சொன்னால் லோகேஷ் கனகராஜ் தன்னை கொன்றுவிடுவார் என பதிலளித்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.
நடிகை மாளவிகா மோகனன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு ரசிகர்களுடன் டிவிட்டர் தளத்தில் உரையாடினார்.
அப்போது ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார் மாளவிகா மோகனன். இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்றும் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்றும் தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

ரோல் என்ன?
மேலும் விஜயுடன் அவர் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படம் குறித்தும் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கெல்லாம் அசராமல் பதில் சொன்னார் மாளவிகா மோகனன். அந்த வகையில் ரசிகர் மாஸ்டர் படத்தில் உங்களின் ரோல் என்ன ஏதாவது ஹின்ட் கொடுக்க முடியுமா என்றார்.

உங்களுக்கு தெரிந்திருக்கும்
அதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன், ஹின்ட் - காலேஜ், ஆனால் எங்களின் அனைத்து போஸ்டர்களையும் பார்த்து படத்தில் எனக்கு என்ன ரோல் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

என்னை கொன்று விடுவார்
மற்றொரு ரசிகர் மாஸ்டர் படத்தில் உங்களின் பெயர் என்ன என்று சொல்ல முடியுமா என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த, மாளவிகா மோகனன், அது C என ஆரம்பிக்கும். அதற்கு மேல் சொன்னால் லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் என்றார்.

பூங்கொடியாக அறிமுகம்
நடிகை மாளவிகா மோகனன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்தப் படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக பூங்கொடி கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











