குறும்படம் எடுக்க தெரியுமா? லோகேஷ் கனராஜ்-தளபதி 67 படத்தில் உதவி இயக்குநர் வாய்ப்பு..மிஸ் பண்ணாதீங்க

சென்னை: போதைப் பொருள் தடுப்புக்கு ஆதரவாக குறும்படங்கள் இயக்கிய குறும்பட இயக்குநர்களுக்கு லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநராகும் வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட யுவா இந்தியா நிகழ்ச்சியின் மூலம் 180க்கும் மேற்பட்ட குறும்படங்கள் குவிந்துள்ளன.

அந்த குறும்படத்தில் சிறந்த குறும்படத்தை இயக்கிய இயக்குநருக்கு அப்படியொரு அரிய வாய்ப்பு கிடைக்கப் போவதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.

போதைப் பொருளுக்கு எதிராக

போதைப் பொருளுக்கு எதிராக

கைதி, விக்ரம் என லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸ் படங்கள் எல்லாமே போதைப் பொருள் தடுப்பை வலியுறுத்தி எடுக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரின் பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், போதை பொருளுக்கு எதிராக குறும்படங்களை உருவாக்கும் போட்டி சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

ஷார்ட் ஃபிலிம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு

ஷார்ட் ஃபிலிம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு

ஷார்ட் ஃபிலிம் இயக்குநர்களுக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டியில் 180க்கும் மேற்பட்ட குறும்படங்கள் குவிந்துள்ளன. அதனை இயக்குநர்கள் குழு பார்த்து, டாப் 10 படங்களை தேர்வு செய்து பரிசு வழங்க போகிறது. அதிலும், முதல் 5 இடங்களில் தேர்வாகும் படங்களை இயக்கிய இயக்குநர்களுக்கு லோகேஷ் கனகராஜ் உடன் உரையாட ஒரு அரிய வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட உள்ளது.

லோகேஷ் கனகராஜ் சிஷ்யனாக

லோகேஷ் கனகராஜ் சிஷ்யனாக

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயகக்த்தில் உருவாக உள்ள அடுத்த படத்தில் அந்த டாப் 5 படங்களை இயக்கிய இயக்குநர்களில் ஒருவரை லோகேஷ் கனகராஜே தனது சிஷ்யனாக தேர்வு செய்வார் என்றும் தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் போதைப் பொருள் வலையில் சிக்கக் கூடாது என்றும் அவர்களின் சிந்தனையை ஆக்கப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்றும் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

தளபதி 67 படத்தில்

தளபதி 67 படத்தில்

போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள குறும்படங்களில் தேர்வாகவுள்ள குறும்படத்தை இயக்கிய அந்த ஒரு இயக்குநருக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகும் தளபதி 67 படத்தில் உதவி இயக்குநராக பணியாற்ற உள்ள மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பது விரைவில் தெரியவரும். வரும் டிசம்பர் மாதம் முதல் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X