அந்த படம் பார்த்துட்டு.. அட்லிக்கு வாழ்த்து சொன்ன மாஸ்டர் இயக்குநர்.. என்ன படம் தெரியுமா?

சென்னை: இயக்குநர் அட்லி படத்தை பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்திருக்கிறது.

Recommended Video

Amazonல் வெளியாகும் தமிழ் படங்கள் | Master, Soorarai pottru

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லி, ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.

தளபதி விஜய்யின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் படங்களை அடுத்தடுத்து இயக்கி இந்தியளவில் டாப் லிஸ்ட் இயக்குநர்கள் லிஸ்டில் இணைந்துள்ளார்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

இயக்குநராக கலக்கி வரும் அட்லி, அடுத்ததாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். ஏ ஃபார் ஆப்பிள் எனும் அட்லியின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் அந்தகாரம் படம் விரைவில் தியேட்டர் ரிலீசுக்கு காத்துக் கிடக்கிறது. விக்னராஜன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

எழுத்துக்கு ரசிகர்

எழுத்துக்கு ரசிகர்

அட்லி வெளியிடவுள்ள அந்தகாரம் படத்தை பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்திருக்கிறது. இந்த லாக்டவுனில் அந்த படத்தை பார்த்து மிரண்டு போன லோகேஷ் கனகராஜ், விக்னராஜன் எழுத்துக்கு ரசிகர் என பதிவிட்டுள்ளார். படம் ரொம்ப சூப்பர் என்றும் பாராட்டியுள்ளார்.

கில்லர் பெர்ஃபார்மன்ஸ்

கில்லர் பெர்ஃபார்மன்ஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கைதி படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த படத்தில் மெயின் வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ், மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், அந்தகாரம் படத்தில் கில்லர் பெர்ஃபார்மன்ஸை அர்ஜுன் தாஸ் கொடுத்திருக்கிறார் என்றும் லோகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி இருக்கு

வெற்றி இருக்கு

பிகில் படத்திற்கு போட்டியாக கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் கைதி படத்தை ரிலீஸ் செய்து, இந்தியளவில் பலரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ். அட்லி வெளியிடவுள்ள இந்த படத்தை பார்த்து, உங்கள் கையில் வெற்றி இருக்கு வாழ்த்துக்கள் என அட்லியையும் வாழ்த்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

மாஸ்டர் படத்திற்கு அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் விலை பேசி வருவதாக தகவல்கள் எழுந்துள்ள நிலையில், தயாரிப்பு தரப்பு தியேட்டர் ரிலீசையே குறி வைத்து இருக்கிறது. சமீபத்தில், ட்விட்டரை தவிர்த்து தனக்கு வேறு எந்த கணக்கும் இல்லை எனக் கூறிய லோகேஷ் கனகராஜ், தற்போது இன்ஸ்டா கிராமத்திலும் குடிபுகுந்துள்ளார். அதிகாரப்பூர்வ ஐடி இதுதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X