For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எடுத்தா அவரோட பயோபிக் தான் எடுப்பேன்.. என்ன லோகேஷ் கனகராஜ் பிளான் எல்லாம் பிரம்மாண்டமா இருக்கு!

  |

  சென்னை: 4வது வாரம் ஞாயிற்றுக்கிழமையிலும் விக்ரம் படத்திற்குத் தான் மக்கள் அதிகளவில் டிக்கெட் எடுத்து படம் பார்க்க செல்கின்றனர் என தியேட்டர் உரிமையாளர்கள் எல்லாம் சந்தோஷமாக ட்வீட் போட்டு வருகின்றனர்.

  Recommended Video

  Vikram படம் BlockBuster-க்கும் மேல! Devi Sri Prasad | Kamal Haasan *Kollywood | Filmibeat Tamil

  இதுவரை இல்லாத அளவுக்கு பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கமல்ஹாசனை உயர்த்தி இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

  400 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் விக்ரம் படத்தை இயக்கி விட்டு அடுத்ததாக விஜய்யின் படத்திற்கான வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜிடம் பயோபிக் எடுத்தா யாருடைய சுயசரிதையை எடுப்பீங்கன்னு கேள்வி எழுப்ப அவர் அடுத்த நொடியே அளித்த பதில் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

  பணத்துக்காக இப்படி பண்ணலாமா?..சர்ச்சையில் சிக்கிய சரத்குமார் !பணத்துக்காக இப்படி பண்ணலாமா?..சர்ச்சையில் சிக்கிய சரத்குமார் !

  வியாபாரம் செய்த விக்ரம்

  வியாபாரம் செய்த விக்ரம்

  தெலுங்கில் ஆர்ஆர்ஆர், கன்னடத்தில் கேஜிஎஃப் உள்ளிட்ட படங்கள் இந்திய மார்கெட்டை தாண்டி சர்வதேச சந்தைகளில் மிகப்பெரிய லாபத்தை ஈட்டிய நிலையில், கோலிவுட்டில் ஒரு படம் கூடவா இல்லை என ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சரியாக லேண்ட் ஆனது கமலின் விக்ரம் படம். 4வது நாளுக்கே தியேட்டர்கள் காத்து வாங்கும் நிலையில், 4வது வாரமாக சிங்க நடை போட்டு வருகிறது விக்ரம்.

  குரு காணிக்கை

  குரு காணிக்கை

  மற்ற நடிகர்களின் படங்களிலேயே குருநாதர் கமல்ஹாசனின் ரெஃபரன்ஸ் வைத்து படம் எடுத்து வந்த லோகேஷ் கனகராஜ், தனது மானசீக குருவுக்கு படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்ததும், அவர் என்ன மாதிரியான ஆள், அவரை இப்படி கண்டுக்காம வச்சிருக்கீங்களே என காட்டி குருவிற்கு சரியான காணிக்கை கொடுத்துள்ளார். தொடர்ந்து கமலுடன் இணைந்து பணியாற்ற ரெடியாகி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

  கமல் பயோபிக்

  கமல் பயோபிக்

  விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகும் லோகேஷ் கனகராஜ் பேட்டி அளித்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், நீங்க ஒரு பயோபிக் எடுத்தா யாரோட பயோபிக் எடுப்பீங்கன்னு கேட்ட கேள்விக்கு, கொஞ்சமும் யோசிக்காமல் கமலோட பயோபிக் தான் எடுப்பேன் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளது கமல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும், அந்த ஐடியா இந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் வந்தது. அவர் சினிமாவில் பட்ட கஷ்டம், உழைப்புன்னு ஒரு பெரிய படத்திற்கான நிறைய விஷயங்கள் அவரது வாழ்க்கையில் இருக்கு என்றும் கூறி கூஸ்பம்ப்ஸ் வர வைத்துள்ளார்.

  நடிக்க ஆள் வேணுமே

  நடிக்க ஆள் வேணுமே

  லோகேஷ் கனகராஜின் இந்த பிரம்மாண்ட பயோபிக் பிளான் எல்லாம் சிறப்பா இருக்கு.. ஆனால், கமல் அளவுக்கு அவர் பயோபிக்கில் நடிக்க ஆள் வேண்டுமே அப்படியொருவர் கிடைப்பது ரொம்பவே அரிது, அவரே ஆட்டோ பயோகிராஃபின்னு நடிச்சாத்தான் உண்டு என கமலின் வெறித்தனமான ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  English summary
  Vikram movie director Lokesh Kanagaraj wish to do Kamal Haasan's biopic after a question raised by a anchor in his recent interview.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X