Lokesh Kanagaraj - அடிக்க நினைத்தவரின் படத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ் - வைரலாகும் ட்வீட்

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) தன்னை அடிக்க நினைத்தவரின் படத்தை லோகேஷ் கனகராஜ் பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார்.

கமல் ஹாசனுக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கின்றார்கள். சாதாரண மக்கள் எந்த அளவுக்கு கமல் ரசிகர்களாக இருக்கிறார்களோ அதே அளவு சினிமா துறையில் இருக்கும் நடிகர்களும், இயக்குநர்களும் கமலின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர். கௌதம் மேனனில் ஆரம்பித்து இப்போது வந்திருக்கும் லோகேஷ் கனகராஜ்வரை அந்த லிஸ்ட் சென்றுகொண்டிருக்கிறது.

Lokesh Kanagaraj Wishes to Good Night Movie Team

லோகேஷ் கனகராஜின் சம்பவம்: கோவையில் கமலின் ஷூட்டிங்கை தூரமாக பார்த்து, சென்னையில் கமலின் வீட்டை ஏக்கத்தோடு பார்த்தவர் இன்று கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தையும் இயக்கிவிட்டார். அதுவும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது. இதனையடுத்து லோகேஷின் டிமாண்ட் திரைத்துறையில் அதிகரித்துள்ளது. மேடைக்கு மேடை தான் கமல் ஹாசனின் எவ்வளவு பெரிய வெறித்தனமான ரசிகர் என்பதை ஆணித்தரமாக சொல்லக்கூடியவர்.

லிஸ்ட்டில் மணிகண்டன்: லோகேஷ்தான் கமலின் தீவிர ரசிகர் என்று பார்த்தால் அந்த லிஸ்ட்டில் இப்போது நடிகர் மணிகண்டனும் இணைந்திருக்கிறார். ஜெய் பீம், விக்ரம் வேதா, ஏலே, காலா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் அவர். நடிகராக மட்டுமின்றி விக்ரம் வேதா படத்துக்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். மேலும் மிகச்சிறந்த பலகுரல் மன்னராகவும் மணிகண்டன் ஜொலித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Lokesh Kanagaraj Wishes to Good Night Movie Team

மணிகண்டன் Vs லோகேஷ் கனகராஜ்: நிலைமை இப்படி இருக்க ஜெய் பீம் படத்துக்காக விருது வாங்கிய மணிகண்டன், 'நான் கமல் ஹாசனின் தீவிர ரசிகன். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் என்று சொல்லும்போதெல்லாம் அடிக்க வேண்டும் என தோன்றும். லோகேஷ் அது என்னுடைய இடம்' என ஓபனாக பேசியிருந்தார். அதனையடுத்து அதே மேடையில் பேசிய லோகேஷ், 'ஒன்னு இல்ல 100 மணிகண்டன் வந்தாலும் சட்டையை கிழிச்சிட்டு சண்டைக்கு போவேன். கமல் சார பத்தி நான்தான் பெருமையா பேசுவேன்' என பதிலளித்திருந்தார்.

Lokesh Kanagaraj Wishes to Good Night Movie Team

குட் நைட்டை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்: இந்நிலையில் மணிகண்டன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான குட் நைட் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "குட் நைட்' படம் பார்த்தேன். கலகலப்பாக, எமோஷனலாக மற்றும் யதார்த்தமாக உள்ளது. நன்றாக ரசித்து பார்க்கக்கூடிய ஒரு படம். மணிகண்டன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

ஹிட்டான குட் நைட்: கடந்த வெள்ளிக்கிழமை (மே 12) குட் நைட், ஃபர்ஹானா, கஸ்டடி, இராவண கோட்டம் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த ரேஸில் குட் நைட் படம்தான் முதல் இடத்தை பிடித்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. விநாயக் சந்திரசேகரன் என்பவர் இயக்கியிருக்கும் இப்படமான குறட்டையால் வரும் பிரச்னை என்ற ஒன்லைனை கொண்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த ஒன்லைனை இதற்கு மேல் யாராலும் இவ்வளவு சுவாரசியமாக படமாக்க முடியாது என பாராட்டு மழையை பொழிந்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X