Coolie - கூலி படத்தில் செம உருட்டு.. லோகேஷ் கனகராஜ் சொதப்பிட்டாரா?.. கலக்கிட்டாரா?.. இதுதான் ரிப்போர்ட்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கூலி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. இயக்குநர் அந்த ஹைப்பை ஏற்றவில்லை. மாறாக அதுவாகவே ஹைப்பை ஏற்றிக்கொண்டது. ரஜினியும், லோகியும் முதன்முறையாக இணைந்ததுதான் அதற்கு காரணம். படம் இன்று வெளியான சூழலில் படத்துக்கு நெகட்டிவ் ரிப்போர்ட்டுகள் அதிகம் வர ஆரம்பித்திருக்கின்றன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து படம் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானவுடனேயே கூலி படத்தின் மீது திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனம் குவிந்துவிட்டது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் அவர்கள் தரமாகவே எதிர்பார்த்தார்கள். அப்படி இருக்கும்போது முழு திரைப்படத்தையும் அவர்கள் எப்படியெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்திருப்பார்கள் என்பதை விளக்க அவசியமில்லை.

இன்று ரிலீஸ்: ஏற்கனவே அறிவித்தபடி ஆகஸ்ட் 14ஆம் தேதியான இன்று படம் ரிலீஸாகியிருக்கிறது. உலகம் முழுவதும் 5,000 ஸ்க்ரீன்கள்வரை படம் ரிலீஸ் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ப்ரீ டிக்கெட் புக்கிங்கில் மட்டுமே கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்வரை வசூலித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன. அதுமட்டுமின்றி ஆயிரம் கோடி ரூபாயை இப்படம் வசூலிக்கும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது.

Lokesh Kanagaraj s film Coolie has started receiving negative reviews
Photo Credit:

முதல் நாள் முதல் காட்சி: தமிழ்நாட்டில் ஒன்பது மணிக்குதான் முதல் காட்சி திரையிடப்பட்டது. மற்ற மாநிலங்களில் எல்லாம் அதற்கு முன்னதாகவே ஷோ ஆரம்பிக்கப்பட்டது. இங்கிருக்கும் ரசிகர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று படத்தை பார்த்துவிட்டார்கள். அவர்கள் முதலில் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்தார்கள். இதனால் படம் ஹிட்தான் என்ற நிலை உருவானது.

அது முதல் பாதி: ஆனால் போகப்போக படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வர தொடங்கியிருக்கின்றன. முதல் காட்சி பார்த்த பூரிப்பில் சில நிமிடங்கள் மட்டுமே படம் சூப்பராக இருந்தது போன்று தோன்றியது; ஆரவாரம் அடங்கிய பிறகு படம் சுத்தமாக கனெக்ட்டே ஆகவில்லை என்று மெல்ல மெல்ல சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். முக்கியமாக பத்திரிகையாளர்கள், சினிமாவை நுட்பத்தோடு பார்ப்பவர்கள் எல்லாம் படம் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை என்று ஓபனாகவே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஜெயிலருக்கும் கீழே: ஒரு பத்திரிகையாளர், "முதல் பாதி சுமார். இரண்டாம் பாதி சுமாருக்கும் கீழே. ரஜினி(க்காக) ரசிகர்க்ள் பார்க்கலாம். லோகேஷ் கனகராஜ் பெத்த ஏமாற்றம். ஜெயிலருக்கும் கீழேதான். சேர் பார்த்ததும் அது டைம் மெஷின் லூப்பர் மாதிரி கடந்த காலத்துக்கு சென்று தாதாவுக்கு நினைவுகள் அழிந்துவிடும். அதை திரும்ப கொண்டு வந்து.. அய்யய்யோ தியரி என்று உருட்டுனீங்க பாருங்க.. லோகேஷ் நேராக ஒரு கதையை சொல்லியிருக்கிறார்" என துவைத்து எடுத்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X