கையில் சிகரெட்டுடன் சஞ்சனா.. கரகரவென கழுத்தை அறுக்கும் லோகேஷ்.. தெறிக்கும் ‘டிசி’ கிளிம்ப்ஸ் வீடியோ!

சென்னை: தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்தின் மூலமாக அனைத்து தரப்பினரின் கவனத்தையும் பெற்றார். அடுத்ததாக அவர் இயக்கிய படங்கள் நல்ல வசூலை அள்ளி தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர் என பெயர் எடுத்து இருக்கும் லோகேஷ் கனகராஜ் 'டிசி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கைதி' திரைபடத்தை இயக்கினார். அந்த படம் லோகேஷ் கனகராஜை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. இதனையடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜய் போன்றவர்களையும் வைத்து படம் இயக்கினார். கடைசியாக இவர் இயக்கி கூலி படம் நல்ல வசூலை அள்ளியபோதும், படத்தில் வந்த வன்முறை காட்சிக்காக கடுமையான விமர்சனத்தை சந்தித்தார். தற்போது இவர், தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கவுள்ளார்.

Lokesh Kanagaraj DC Arun Matheswaran
Photo Credit:

லோகேஷ் கனகராஜின் டிசி: இந்த நிலையில், இயக்குனராக இருந்த லோகேஷ் கனகராஜ் நாயகனாக 'டிசி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில், சஞ்சனா, வாமிகா கபி ஆகியோர் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். அதிரடி ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது

Bloody Valentine: இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு 'டிசி' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் சஞ்சனா பார்வதி என்கிற ரோலிலும், வாமிகா கபி சந்திராவாகவும், லோகேஷ் கனகராஜ் தேவதாஸ் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தற்போது வெளியாகி இருக்கும் கிளிம்ப்ஸ் வீடியோவில் சஞ்சனா சிகரெட்டை பிடித்துக்கொண்டு இருக்க, அந்த அறைக்குள் லோகேஷ் வருவது போல காட்சி உள்ளது. அந்த காட்சியை பார்க்கும் போது சஞ்சனா விலைமாதுவாக சிலரிடம் சிக்கி தவிக்க, அவர் காதலிக்கும் லோகேஷ் அவளை ரௌடிகளிடம் இருந்த மீட்டு செல்லும் கதையாக 'டிசி' படத்தின் கதை இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், படத்தில் அரிவாள், வெட்டு, ரத்தம் வன்முறை காட்சிகள் அதிகமாக இடம் பெற்று உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X