Lokesh: லோகேஷ் பட தமிழக வெளியீட்டு உரிமை.. கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. ரிலீசுக்காக வெயிட்டிங்!

சென்னை: மாநகரம் முதல்கொண்டு தற்போது வெளியாகியுள்ள லியோ படம் வரையில் அதிகமான வரவேற்பை தமிழில் பெற்றுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இதுவரை கோலிவுட்டில் 5 படங்களை இயக்கியுள்ள லோகேஷ், அனைத்து படங்களையும் வெற்றிப்படங்களாக மாற்றியுள்ளார்.

Lokesh kanagarajs Fight club movie TN theatrical rights bagged by Sakthi film factory

இதன்மூலம் ஏராளமான ரசிர்களை வசப்படுத்தியுள்ள லோகேஷ், அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: மாநகரம் என்ற படத்தின்மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் எளிமையான வகையில் அதிரடியாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் இந்தப் படம் ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்து முதல் படத்திலேயே கவனத்திற்குரிய இயக்குநராக லோகேஷை மாற்றியது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தப் படமான கைதி படத்தில் கார்த்தியை லீட் கேரக்டரில் வைத்து எடுத்திருந்தார்.

மிரட்டலான கைதி படம்: கார்த்தி சாக்லேட் பாய் உள்ளிட்ட கேரக்டர்களில் நடித்திருந்தாலும் அவரது கேரியரில் பெஸ்ட்டாக கைதி படம் அமைந்தது. சிறையிலிருந்து விடுதலையாகி தன்னுடைய மகளை சந்திக்க செல்லும் கேரக்டரில் அதிரடி காட்டியிருந்தார் கார்த்தி. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் அதிகமான கவனத்தை பெற்ற நிலையில், படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். விரைவில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

விஜய்யுடன் இரு படங்களில் கூட்டணி: இந்த இரு படங்களின் வெற்றி அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷுக்கு பெற்றுத் தந்தது. இந்த வெற்றிக் கூட்டணி தற்போது லியோ படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. முன்னதாக கமலையும் இயக்கி முடித்துள்ளார் லோகேஷ். இந்தப் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்துள்ளது. சமீபத்தில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் வசூலில் சாதனை படைத்துள்ளது.

அடுத்த ஆண்டில் துவங்கும் தலைவர் 171: அடுத்ததாக ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார் லோகேஷ். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தற்போது லோகேஷ் மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவருக்கு பெசண்ட் நகரில் பிரம்மாண்டமான வீட்டை தயாரிப்பு தரப்பு அமைத்துக் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தயாரிப்பாளராக மாறிய லோகேஷ்: இயக்குநராக மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனத்தை சமீபத்தில் அறிவித்துள்ளார். ஜி ஸ்குவாட் என்று அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயரிட்டுள்ளார். முதலில் தன்னுடைய நெருக்கமான நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் படைப்புகளை திரையில் கொண்டுவர உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

டிசம்பரில் ரிலீசாகும் ஃபைட் கிளப்: இந்நிலையில் அவரது தயாரிப்பில் உருவாகிவரும் ஃபைட் கிளப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. படத்தில் உறியடி படத்தில் நடித்திருந்த விஜய்குமார் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் நடிகை மோனிஷா மேனன் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் இந்த மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X