Lokesh: லோகேஷின் LCU ஷார்ட் ஃபிலிம்... தட்டித் தூக்கிய நெட்பிளிக்ஸ்... ஓடிடி ரைட்ஸ் இத்தனை கோடியா?

சென்னை: கோலிவுட்டில் சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ். அவரது LCU உருவானது குறித்து உருவாகியுள்ள ஷார்ட் ஃபிலிம் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளதாம். மேலும் அதன் ஓடிடி ரைட்ஸ் பல கோடிகளுக்கு விலை போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோகேஷின் LCU ஷார்ட் ஃபிலிம் ஓடிடி ரைட்ஸ்
மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே திரும்பிப் பார்க்க வைத்த லோகேஷ், இரண்டாவதாக கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கினார். இந்தப் படம் எதிர்பாராத வகையில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனால் லோகேஷின் மார்க்கெட் வேல்யூ எகிறியது. அதேபோல் மூன்றாவது படத்திலேயே விஜய்யுடன் இணைந்தார்.

Lokesh: Netflix has bought Lokeshs LCU short movie for 3 crores

அதன்படி விஜய் - லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படமும் சூப்பர் ஹிட்டானது. இதனால் கமல் - லோகேஷ் கூட்டணியில் உருவான விக்ரம் திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இறுதியாக கடந்தாண்டு வெளியான விக்ரம், கோலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமாவையே கதிகலங்க வைத்தது. கைதி படத்தில் இருந்து லீட் எடுத்து விக்ரமை இயக்கிய லோகேஷ், அவருக்கென தனி சினிமாட்டிக் யூனிவர்ஸை உருவாக்கினார்.

அதனடிப்படையில் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற LCU உருவானது. அதேபோல் லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விஜய்யின் லியோ படத்தையும் LCU பின்னணியில் இயக்கியிருந்தார் லோகேஷ். இதனால் LCU என்பதே மிகப் பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது, மேலும் அதுகுறித்த எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியது. இந்நிலையில், ரஜினியின் தலைவர் 171 படத்துக்குப் பின்னர் கைதி 2 இயக்கவுள்ளார் லோகேஷ்.

Lokesh: Netflix has bought Lokeshs LCU short movie for 3 crores

இந்தப் படம் LCU உருவானது குறித்தும், கார்த்தியின் ப்ளாஷ்பேக் என்ன என்பதையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரோலக்ஸ் கேரக்டர் தனி படமாக உருவாகும் என்பதையும் லோகேஷ் கன்ஃபார்ம் செய்துள்ளார். இறுதியாக விக்ரம் 2ம் பாகத்தோடு LCU முடிவுக்கு வரும் எனவும் லோகேஷ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், LCU உருவானது பற்றி லோகேஷ் ஒரு ஷார்ட் ஃபிலிம் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் குறித்து கைதி, விக்ரம் படங்களில் நடித்திருந்த நரேன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி இந்த ஷார்ட் ஃபிலிம் 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஓடும் என சொல்லப்படுகிறது. முதலில் இந்தப் படத்தை யூடியூப்பில் வெளியிட லோகேஷ் முடிவு செய்திருந்தாராம். ஆனால், லோகேஷின் மார்க்கெட் வேல்யூவை தெரிந்துகொண்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம், LCU ஷார்ட் ஃபிலிம்மை வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

3 கோடி ரூபாய்க்கு LCU ஷார்ட் ஃபிலிம்ஸ் ஓடிடி உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம், இந்தப் படத்தை ஜனவரி மாதம் வெளியிட முடிவு செய்துள்ளதாம். விரைவில் இதுபற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X