Lokesh On Ajith: சான்ஸ் கிடைத்தால் அஜித்துடன் கூட்டணி... விரைவில் நல்ல செய்தி... லோகேஷ் ட்விஸ்ட்

சென்னை: மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.

தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என ப்ளாக் பஸ்டர் படங்களை இயக்கி மாஸ் காட்டி வருகிறார்.

தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கும் லோகேஷ், அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171ல் கமிட்டாகியுள்ளார்.

 Lokesh On Ajith: Lokesh Kanagaraj has said that he is ready to direct Ajith

இந்நிலையில், அஜித் படத்தை இயக்க ஆசையுள்ளதாக கூறி ஒரு ட்விஸ்ட் கொடுத்துள்ளார் லோகேஷ்.

விரைவில் அஜித்துடன் கூட்டணி?
மாநகரம் மூவி மூலம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ், நான்கே படங்களில் இன்று கோலிவுட்டின் டாப் மோஸ்ட் இயக்குநராகிவிட்டார். கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர், கமல்ஹாசனின் விக்ரம் என அடுத்தடுத்து மெகா ப்ளாக் பஸ்டர் படங்களாக இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார்.

விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் என மிகப் பெரிய ஸ்டார் காஸ்டிங்குடன் உருவாகி வருகிறது லியோ. இந்தப் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் மட்டும் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் அடுத்தடுத்து பல அப்டேட்கள் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். லியோவை முடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளாராம் லோகேஷ்.

இத்திரைப்படம் குறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ்ஜே லீட் கொடுத்துள்ளார். தலைவர் 171 படமும் லோகேஷின் LCU கான்செப்ட்டில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. கமல், விஜய் ஆகியோரை இயக்கிய லோகேஷ், அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடனும் இணையவுள்ளார். இதனால் லோகேஷின் படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 Lokesh On Ajith: Lokesh Kanagaraj has said that he is ready to direct Ajith

லோகேஷ் இயக்கும் படங்களின் அடுத்த ஹீரோ யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. இதனிடையே அஜித்துடன் லோகேஷ் இணைவாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி வைரலாகி வருகிறது. இதுகுறித்து லோகேஷ் கனகராஜ்ஜே விளக்கம் கொடுத்துள்ளார். கோவையில் உள்ள டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், "அஜித்துடன் பணிபுரிய தனக்கு ஆசை உள்ளது. சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக அஜித் சாரை வைத்து படம் இயக்குவேன்" என அதிரடியாக கூறியுள்ளார். இதனால், அஜித் - லோகேஷ் கூட்டணி விரைவில் இணையும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 10 படங்களுக்கு மேல் இயக்க மாட்டேன், அதன்பின்னர் சினிமாவில் இருந்து விலகிவிடுவேன் என லோகேஷ் கூறியுள்ளார்.

அதனால், விரைவில் அஜித்துடன் இணைந்து ஒரு படம் பண்ணிவிடுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், அந்தப் படம் லோகேஷின் LCU கான்செப்ட்டில் இருக்க வேண்டும் என்றும், அதில் அஜித்துடன் 'லியோ' விஜய்யும் நடித்தால் நன்றாக இருக்கும் என கனவில் கோட்டை கட்டி வருகின்றனர் ரசிகர்கள். ஆனால், இது நடக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X