Lokesh On Vijay: 'விஜய்ண்ணா'... எல்லாருமே சார் தான்... விஜய் மட்டும் தான் அண்ணா... லோகேஷ் பளீச்!
சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ, அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக லியோவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லியோ படத்தை விஜய்க்காகவே ரொம்ப ஸ்பெஷலாக உருவாக்கியுள்ளாராம் லோகேஷ்.
இந்நிலையில், விஜய் குறித்து மனம் திறந்துள்ள லோகேஷ், அவரை மட்டுமே அண்ணா என அழைப்பேன் என பெருமிதமாக கூறியுள்ளார்.

விஜய் மட்டும்தான் அண்ணா!:மாநகரம், கைதி என அடுத்தடுத்து இரண்டு ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்ஜை நம்பி மாஸ்டர் படத்தில் கமிட்டானார் விஜய். அவருடன் விஜய் சேதுபதியும் இணைய மாஸ்டர் தெறி ஹிட்டானது. கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில், திரையரங்குகளில் வெளியானது மாஸ்டர்.
ஆனால், இந்த தடைகளை கடந்து 200 கோடி ரூபாய் வரை வசூலித்தது மாஸ்டர். இப்படம் உருவானபோது விஜய் - லோகேஷ் இடையே ஏற்பட்ட நட்பு, இப்போது லியோ படத்தில் இன்னும் அதிகமாகிவிட்டதாம். அட்லீக்குப் பிறகு விஜய்யின் அன்புத் தம்பியாக வலம் வருகிறாராம் லோகேஷ். அதேபோல், விஜய் குறித்து பேசினாலே அவரை அண்ணா என்று தான் குறிப்பிடுகிறார் லோகேஷ்.
தற்போது இந்த உறவு குறித்து லோகேஷ் கனகராஜ் மனம் திறந்துள்ளார். கோவையில் உள்ள டாக்டர் எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் லியோ திரைப்படம் குறித்தும் சில அப்டேட்களை வெளியிட்டார். முக்கியமாக லியோ செகண்ட் சிங்கிள் வெளியாக இன்னும் கொஞ்சம் தாமதமாகும் என்றார்.
மேலும், அது வழக்கமான விஜய் பாடலாக இல்லாமல், இன்னும் ஸ்பெஷலாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எல்லோரையும் சார் என்று அழைப்பேன் எனக் கூறிய லோகேஷ், விஜய்யை மட்டும் தான் அண்ணா என கூப்பிடத் தோன்றியதாகக் கூறியுள்ளார். ரசிகர்களுக்கு மட்டுமே விஜய்ண்ணாவாக இருந்த தளபதி, இப்போது லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அண்ணனாகிப் போனார்.

ஏற்கனவே பல பேட்டிகளிலும் விஜய்யை அண்ணா என்றே குறிப்பிட்டு பேசிய லோகேஷ், தற்போது அதற்கான காரணத்தை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இதன் மூலம் விஜய்யும் லோகேஷும் ரொம்பவே நெருங்கிவிட்டார்கள் என்றும், மீண்டும் இன்னொரு படத்தில் இணையலாம் எனவும் ரசிகர்கள் தங்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே விஜய்யின் லியோ படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்ட லோகேஷ், தற்போது அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டாராம். லியோ வெளியானதும் விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











