ரஜினிக்காக இணையும் விஜய் - அஜித்... லோகேஷின் மாஸ்டர் ப்ளான் ஒர்க் அவுட் ஆகுமா?

சென்னை: லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையைத் தொடர்ந்து தற்போது காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

லியோவை அடுத்து கைதி 2, விக்ரம் 2 திரைப்படங்கள் லோகேஷின் லைன்-அப்பில் உள்ளன.

இந்நிலையில், ரஜினிக்காக விஜய் - அஜித் இருவரையும் ஒரு படத்தில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் ப்ளான் போட்டுள்ளாராம்.

 ரஜினியுடன் இணையும் லோகேஷ்?

ரஜினியுடன் இணையும் லோகேஷ்?

மாநாகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து ஹிட் மேல் ஹிட் கொடுத்துவரும் லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார். சென்னையை தொடர்ந்து தற்போது காஷ்மீரில் லியோ பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சஞ்சய் தத் தொடர்பான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டன. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், ரஜினியின் கடைசி படத்தை லோகேஷ் இயக்கலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

 லோகேஷின் முடிவு என்ன?

லோகேஷின் முடிவு என்ன?

தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170-ல் நடிக்கவுள்ளார். இறுதியாக ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ரஜினியின் பல வருட கனவாக உள்ளது. இதற்கு தற்போது லோகேஷ் கனகராஜ் தான் சரியான ஆள் என்பதால், அவரிடமே ரஜினி நேரில் தொடர்புகொண்டு கேட்டுவிட்டாராம். இதுகுறித்து லோகேஷும் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

 விஜய் - அஜித் காம்போ

விஜய் - அஜித் காம்போ

இதனிடையே ரஜினிக்காக விஜய் - அஜித் இருவரையும் ஒன்றிணைக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மாநகரம் முடித்துவிட்டு அஜித்துக்காக ஒரு கதை ரெடியாக வைத்திருந்தாராம் லோகேஷ். ஆனால், அப்போது அஜித்தால் நடிக்க முடியாமல் போய்விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், விஜய் - அஜித் இருவரையும் ஒரு படத்தில் நடிக்க வைக்கலாம் என லோகேஷ் பக்காவான ப்ளான் போட்டு வருகிறாராம்.

 ரஜினி படத்தின் ரீமேக்

ரஜினி படத்தின் ரீமேக்

ராஜாவின் பார்வையிலே படத்திற்குப் பின்னர் விஜய்யும் அஜித்தும் இணைந்து நடிக்கவில்லை. பொது இடத்தில் அவர்கள் இருவரும் நண்பர்களாக சந்தித்துக்கொண்டாலும், ரசிகர்கள் அவர்களை எதிரெதிர் துருவங்களாக வைத்து சண்டையிட்டு வருகின்றனர். இப்படியொரு சூழலில் ரஜினியின் தளபதி பட ரீமேக்கில் விஜய் - அஜித்தை இணைந்து நடிக்க வைக்க லோகேஷ் ப்ளான் போட்டுள்ளாராம்.

 நண்பேண்டா மொமண்ட்

நண்பேண்டா மொமண்ட்

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி - மம்மூட்டி இணைந்து நடித்த தளபதி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினியும் மம்முட்டியும் இணைபிரியாத நண்பர்களாக நடித்து மிரட்டியிருப்பார்கள். இந்தப் படத்தின் ரீமேக்கில் ரஜினி கேரக்டரில் விஜய்யையும் மம்முட்டி பாத்திரத்தில் அஜித்தையும் நடிக்க வைக்கலாம் என லோகேஷ் ஒரு கணக்குப் போட்டு வைத்துள்ளாராம். சமீபத்தில் ஒரு பேட்டியில் ரீமேக் படங்கள் பற்றி பேசியிருந்த லோகேஷ், விஜய், அஜித் நடிப்பில் தளபதி ரீமேக் இயக்க வேண்டும் என்பது தனது கனவு எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. லோகேஷின் விருப்பப்படி விஜய்யும் அஜித்தும் தளபதி ரீமேக்கில் நடித்துவிட்டால், ஒட்டு மொத்த சினிமா இண்டஸ்ட்ரியையும் இந்தப் படம் திரும்பிப் பார்க்க வைத்துவிடும் என்பது மட்டும் நிச்சயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X